என்ன கன்றாவிடா இது.. ஓ சொல்றியாவும் காவாலாவையும் கலந்து ஒரு குத்தாட்டம்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஜெயிலர் படத்தில் தமன்னா போட்ட தாராள ஆட்டமான காவாலா மற்றும் புஷ்பா படத்திற்கு கட்டுப்பாடற்ற கவர்ச்சியை காட்டி சமந்தா போட்ட ஓ சொல்றியா மாமா பாடல் இரண்டையும் மிக்ஸ் செய்து சரக்கு பட நடிகை சூர்யபிரபா போட்டுள்ள குத்தாட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி சன் டிவியில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகிறது.

காவாலா பாடல் 100 மில்லியன் வியூஸ் கடந்து அதிரடி காட்டி வரும் நிலையில், லோக்கல் நடிகைகள் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் வரை பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி ரீல்களாக போட்டு வருகின்றனர்.
அரபிக் குத்து போல: இயக்குநர் நெல்சன் தனது படங்களில் வரும் பாடல்களுக்கு தனி ப்ரோமோ எல்லாம் போட்டு தாறுமாறு செய்து வருகிறார். அரபிக் குத்து பாடலுக்கு பிறகு காவாலா பாடல் சரியான ரீச் அடைந்து அசத்தி வருகிறது.
ஜெயிலர் படம் வெளியாகும் முன்னமே 100 மில்லியன் வியூஸை கடந்து காவாலா கன்னாபின்னா ஹிட் அடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட மாடல்களும், நடிகைகளும் அந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

காவாலா + ஓ சொல்றியா: எதையாவது வித்தியாசமாக செய்து டிரெண்டிங்கில் இடம்பெற வேண்டும் என நினைத்து குலுக்கல் டான்ஸ் போட்டு வரும் சரக்கு பட நடிகை சூர்யபிரபா காவாலா பாடலுக்கு ஏற்கனவே தனியாக நடனம் ஆடியிருந்த நிலையில், தற்போது காவாலா பிளஸ் ஓ சொல்றியா பாடல்களை மிக்ஸ் செய்து போட்டுள்ள குத்தாட்ட வீடியோ பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கலாய்க்கும் ரசிகர்கள்: சூர்யபிரபாவின் கவர்ச்சி நடனத்தை பார்த்து ஜொள்ளு விட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட்டுகளை போட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் வழக்கம் போல நெட்டிசன்கள் என்ன கன்றாவிடா இது என்றும் தமன்னா தயவு செய்து இந்த டான்ஸை பார்த்துடாதீங்க என்றும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











