twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொரு முறையும் உங்களை நீங்க புதுப்பிச்சுக்குறீங்க.. சூர்யாவின் இந்த பாராட்டு யாருக்கு தெரியுமா?

    |

    சென்னை: ஒவ்வொரு முறையும் உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்கிறீர்கள் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை நடிகர் சூர்யா பாராட்டி உள்ளார்.

    இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சூரரைப் போற்று படம் உருவாகி இருக்கிறது.

    கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் திறக்காத நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

    அந்த படத்துக்கு முன்பாக.. டோலிவுட்டில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் மாஸ்டர் இயக்குநர்?அந்த படத்துக்கு முன்பாக.. டோலிவுட்டில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் மாஸ்டர் இயக்குநர்?

    யூடியூப் டாப் 100

    யூடியூப் டாப் 100

    ஜி.வி.பிரகாஷ் இசையில் கவிஞர் சிநேகன் எழுதி பாடகி தீ பாடிய "காட்டுப் பயலே" பாடலுக்கு யூடியூபில் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியான அந்த பாடலின் ஒரு நிமிட வீடியோ யூடியூப் இந்தியாவில் டாப் 100 பாடல்களில் 28வது இடத்தை பிடித்தது.

    ஜி.வி. பிரகாஷ் குமார் மகிழ்ச்சி

    ஜி.வி. பிரகாஷ் குமார் மகிழ்ச்சி

    இந்த வாரத்திற்கான யூடியூப் இந்தியாவின் சிறந்த டாப் 100 பாடல்களில், எண்ணற்ற பாலிவுட் பாடல்களும், டோலிவுட் பாடல்களும் இடம்பிடித்து உள்ள நிலையில், தமிழ் பாடலான "காட்டுப் பயலே" பாடல் 28வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. அந்த சந்தோஷத்தை ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டு மகிழ்ந்தார்.

    சூர்யா பாராட்டு

    சூர்யா பாராட்டு

    இந்நிலையில், தற்போது அந்த ட்வீட்டை பார்த்த நடிகர் சூர்யா, தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொண்டு, புதிய இசையை உருவாக்கி அசத்துகிறீர்கள். சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த இசையை கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி என சூர்யா பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

    ஒருபோதும் தவறியதில்லை

    ஒருபோதும் தவறியதில்லை

    சூர்யாவின் இந்த திடீர் ட்வீட்டை பார்த்து ஆச்சர்யபட்ட அவரது ரசிகர்கள், சூரரைப் போற்று படம் குறித்த அப்டேட்டை கேட்டும், திறமையானவர்களை பாராட்ட எங்க தலைவன் ஒருபோதும் தவறியதில்லை என்றும், சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு பாட்டு

    ஜல்லிக்கட்டு பாட்டு

    அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கும் இசை நம்ம ஜி.வி. பிரகாஷ் தான். இந்நிலையில், வாடிவாசல் படத்துல ஜல்லிக்கட்டு பத்தின ஒரு பாட்டு வைங்க, அதை நம்ம சூர்யா சார் வாய்ஸ்ல பாடுனா வேற லெவலில் இருக்கும் என ஜி.வி. பிரகாஷுக்கு சூர்யா ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    Suriya surprisingly send his wishes for GV Prakash Kumar for the song Kaattu Payale which will take place in Youtube top 100 songs this week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X