த்ரிஷா வேணாம், வயசாயிடுச்சு: முதல்ல நீ வளரணும் தம்பி- த்ரிஷா, சூர்யா லடாய்

By Siva

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷா வேண்டாம் அவருக்கு வயதாகிவிட்டது என்று சூர்யா கூறினாராம். பதிலுக்கு த்ரிஷா முதலில் நீ வளரணும் தம்பி என்று கூறியுள்ளாாராம்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் சூர்யாவுடன் ஜோடி சேர த்ரிஷாவும், அமலா பாலும் போட்டி போட்டனர். த்ரிஷா தேர்வாவது போல் இருந்த நிலையில் அந்த வாய்ப்பு அமலாவுக்கு சென்றுவிட்டது.

இந்நிலையில் அமலாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க சூர்யா தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

சூர்யா வைத்தது தான் சட்டம்

சூர்யா வைத்தது தான் சட்டம்

காக்க காக்க படத்தில் நடித்தபோது கௌதம் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருந்தார் சூர்யா. ஆனால் துருவ நட்சத்திரத்தில் சூர்யா சொல்வது தான் சட்டமாம்.

த்ரிஷாவுக்கு வயதாகிவிட்டது

த்ரிஷாவுக்கு வயதாகிவிட்டது

படத்தில் நாயகி பள்ளி மாணவி போன்று வர வேண்டி உள்ளது. த்ரிஷாவுக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு ஸ்கூல் யூனிபார்ம் போட்டால் நன்றாக இருக்காது. அதனால் அமலா பாலையே ஓகே செய்துவிடுங்கள் என்று சூர்யா ஆர்டர் போட கௌதம் ஒப்புக் கொண்டாராம்.

கொதித்துப் போன த்ரிஷா

கொதித்துப் போன த்ரிஷா

சூர்யா கூறியது த்ரிஷா காதுக்கு எட்ட அம்மணி டென்ஷனாகிவிட்டாராம். அவர் மட்டும் வாரணம் ஆயிரம் படத்தில் ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நடிக்கலாம், நான் மட்டும் நடித்தால் நல்லா இருக்காதாமா என்று பொரிந்து தள்ளிவிட்டாராம்.

முதல்ல நீ வளரணும் தம்பி

முதல்ல நீ வளரணும் தம்பி

சூர்யா மீது இருந்த கடுப்பில் முதலில் நீ வளர வேண்டும் தம்பி என்று கூறி சிரித்துள்ளார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X