Dev Trailer: கார்த்தி ஈசியாக சொல்லிட்டார், எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைச்சது?
Recommended Video

சென்னை: கார்த்தி நடித்துள்ள தேவ் பட ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார்.
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது.

நேர் எதிர் குணம் கொண்டவர்களாக கார்த்தியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தேவ் பட ட்ரெய்லரை ஜனவரி 31ம் தேதி மாலை சூர்யா வெளியிடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவித்தபடி ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார். ட்ரெய்லர் அருமையாக வந்திருக்கிறது என்றே கூற வேண்டும். எந்த வேலையை பண்ணும்போது பணம், புகழை தாண்டி மனசு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கோ அதான்டா உனக்கான வேலை என்று ட்ரெய்லரில் கார்த்தி கூறிகிறார். உங்களில் எத்தனை பேர் அப்படிப்பட்ட வேலையை செய்கிறீர்கள்?.
கார்த்திக்கு ஏற்ற ஜோடியாக தெரிகிறார் ரகுல். காதலை கொண்டாடும் இந்த படத்தை காதலர் தினத்தில் பார்த்து காதலர்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications