சூர்யா வெளியிட்ட ’வெற்றிவேலா’ ஆல்பம்.. அறுபடை வீட்டுக்கும் பாட்டுப் போட்ட பாடகர் கிரிஷ்!

சென்னை: கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தும் விதமாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக ஏகப்பட்ட பேர் கொந்தளித்த நிலையில், அதற்கு பதிலாக முருக கடவுளுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றிவேலா ஆல்பத்தை பிரபல பாடகரும் நடிகருமான கிரிஷ் உருவாக்கி உள்ளார்.

தற்போது அந்த பாடலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சை

கறுப்பர் கூட்டம் சர்ச்சை

தமிழ் கடவுளான முருகரையும் கந்த சஷ்டி கவசப் பாடலையும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அவதூறாக சித்தரித்து வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குகளும் பதியப்பட்டது.

டிரெண்டானது

டிரெண்டானது

முருகக் கடவுளை இழிவுப்படுத்தியதை கண்டித்து ஏகப்பட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களின் வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தினர். பல ஹாஷ்டேக்குகளும் டிரெண்ட் செய்யப்பட்டு கண்டனங்கள் வலுத்தன. சுகிசிவம் உள்ளிட்ட சில பிரபலங்கள், கந்த சஷ்டி கவசத்தின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வெற்றிவேலா ஆல்பம்

வெற்றிவேலா ஆல்பம்

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான கிரிஷ், வெற்றிவேலா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார். முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர் சோலை என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாடல் தலைப்பாக்கி இதனை உருவாக்கி உள்ளார்.

சூர்யா ரிலீஸ்

சூர்யா ரிலீஸ்

இந்த பாடல் ஆல்பத்தை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனது அருமை நண்பர் கிருஷ் உருவாக்கி உள்ள வெற்றி வேலா ஆல்பத்தை சோனி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதனை கேட்டு மகிழுங்கள் என நடிகர் சூர்யா ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

Actor Shivakumar The Untold Story • Visual Artist, Orator | Filmibeat tamil
இது தான் சார் எங்க அண்ணன்

இது தான் சார் எங்க அண்ணன்

இந்து மதத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் செயல்படுவதாக ஏகப்பட்ட எதிர்ப்புகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில், இந்த ட்வீட்டை ஷேர் செய்து வைரலாக்கும் சூர்யா ரசிகர்கள், இது தான் சார் எங்க அண்ணன் என குறிப்பிட்டு, சூர்யாவையும் வெற்றி வேலா ஆல்பம் பாடலையும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X