விசித்திரன் படத்தின் டீசரை வெளியிட்ட சூர்யா!
சென்னை : ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் விசித்திரன்.
இந்த படத்தை பத்ம குமார் இயக்க, ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்க, பாலா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

ஜோசப் ரீமேக்
மலையாளம் மொழியில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் தான் விசித்திரன். மலையாளம் மொழியில் ஜோசப் திரைப்படம் பத்ம குமார் இயக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழிலும் அதே இயக்குனர் விசித்திரன் படத்தை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து முன்னனி நடிப்பில்
ஆர். கே. சுரேஷ் தமிழில் சில படங்களை தயாரித்துள்ளார். பின்னர் மருது படத்தில் வில்லனாகவும், பில்லா பாண்டி, வன்முறை போன்ற படங்களில் நடிகராகவும் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது விசித்திரன் படத்தில் நடித்துள்ளார் ஆர். கே. சுரேஷ்.

எதிர்பார்ப்பில் விசித்திரன்
விசித்திரன் படத்தை பிரபல இயக்குனர் பத்மகுமார் இயக்க முன்னணி இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்க, ஜான் மகேந்திரன் வசனங்களை எழுதியுள்ளார். வலுவான கூட்டணி உள்ள படத்தை பாலா தயாரிக்க விசித்திரன் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

நல்ல வரவேற்பை பெற்றது
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து நடிகரும் இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பருமான சூர்யா விசித்திரன் படத்தின் டீசரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விசித்திரன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











