செல்வராகவன் விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கும் சூர்யா?
சென்னை: செல்வராகவன் விஜய்க்கு சொன்ன கதையில் தான் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று இளைய திலகம் பிரபுவின் வீட்டில் வைத்து இயக்குனர் செல்வராகவனும், இளைய தளபதி விஜய்யும் சந்தித்தனர். அப்பொழுது செல்வா விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருந்தார்.

விஜய்க்கு கதை பிடித்திருந்தாலும் அதில் நடிக்க சம்மதம் தெரிவிக்காமல் யோசனையிலேயே இருந்தார். செல்வாவின் கதைக்கு இன்னும் விஜய் ஓகே சொல்லவில்லை என பிரபு கூட அண்மையில் தெரிவித்தார்.
விஜய், செல்வா இணையும் படத்தை தனுஷ் தயாரிப்பார் என்று கூட கூறப்பட்டது. இந்நிலையில் தான் செல்வா சூர்யாவை வைத்து படம் பண்ணுகிறார். விஜய்க்கு சொன்ன கதையில் தான் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.
இது விஜய்க்கு சொன்ன கதையா இல்லை புதுக் கதையா என்பதை செல்வா தான் கூற வேண்டும்.
Comments


Click it and Unblock the Notifications