Retro Womens FDFS: ரெட்ரோ.. பெண்களுக்கு சிறப்பு FDFS.. ரசிகைகளோடு படம் பார்த்த சூர்யாவின் ரத்தம்!

திருப்பூர்: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படம் இன்று அதாவது மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் இன்று தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் பெண்களுக்கு சிறப்பு FDFS திரையிடப்பட்டது. இந்த சிறப்பு FDFS காட்சியில் சூர்யாவின் தங்கை பிருந்தா ரசிகைகளுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

சூர்யாவின் நடிப்பில் உருவாகி, இன்று வெளியாகியுள்ள ரெட்ரோ படத்தை சூர்யாவே தயாரித்துள்ளார். படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 700 ஸ்கீர்ன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், சூர்யாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் இருந்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கணிசமான அளவுக்கு ரெட்ரோ படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் படத்திற்கு காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ் அரசோ அல்லது அண்டை மாநில அரசுகளோ அனுமதி அளிக்கவில்லை. மாறாக காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Suriya Retro Movie Ladies Speacial FDFS Screening With Suriya a Sister Brindha

ரெட்ரோ: சூர்யாவின் கடந்த படமான கங்குவா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. இப்படியான நிலையில் ரெட்ரோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில் இணையத்தில் கம்பு சுத்தாமல் ரசிகர்கள் அமைதியாகவும் இருந்தார்கள். படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத்தான் ஓடியது. இதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

பெண்களுக்கு FDFS: இப்படி இருக்கும்போது திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களைக் கொண்ட இந்த தியேட்டரில் பெண்களுக்கு என மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட காட்சியில் பெண்கள் மட்டுமே பார்த்தனர். சூர்யாவின் வெறித்தனமான பெண் ரசிகைகளுடன் அமர்ந்து சூர்யாவின் தங்கையான பிருந்தாவும் படம் பார்த்தார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது இந்த நிகழ்வு குறிப்பிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Suriya Retro Movie Ladies Speacial FDFS Screening With Suriya a Sister Brindha

சூர்யா தங்கை: அதாவது அவர் பேசும்போது, " மிகப்பெரிய திருவிழாவைப் போல இந்த சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். மகளிருக்கு என சிறப்பு FDFS-ஐப் பார்க்கும் போது பெரிய கொண்டாட்டம் போல உள்ளது. படம் பார்க்க வந்த பெண்களுக்கு ரோஜா பூ எல்லாம் கொடுத்து மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்துள்ளார்கள். அண்ணாவின் பாடல்களை திரையிட்டு அனைவரையும் கொண்டாட வைத்துவிட்டார்கள். பெண்கள் மற்ற கூட்டத்தில் படத்தைப் பார்க்க சிரமம் இல்லாமல் வந்து இந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்துள்ள சக்தி சினிமாஸ்க்கு நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவும் சூர்யாவின் தங்கை பிருந்தாவின் பேட்டியும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X