Suriya: கங்குவா கொடுத்த மரண அடி.. கப்சிப்னு இருக்கும் சூர்யா ரசிகர்கள்.. ரெட்ரோ ஃபீவர் ஸ்டார்ட் ஆகலயா?

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் நாளை அதாவது மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் நாளைக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் சாந்த சொரூபிகளாக அமைதியாக இருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இந்த படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, ரிலீஸுக்கு தயாராக இருந்தது. படத்தின் ஓடிடி பிசினஸ் மற்றும் ஓடிடி தளங்கள் அவற்றை ஸ்ட்ரீம் செய்ய ஷெடியூல் செய்வது உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி உறுதிப் படுத்தப்படாமல் இருந்தது. அதன் பின்னர் படத்தை மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து அதற்கான புரோமோசன் பணிகள் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த வாரத்தில் தொடங்கிவிட்டது. படத்தின் புக்கிங் தொடங்கியதும் ரசிகர்கள் அவற்றை சில நிமிடங்களில் வாங்கிக் குவித்தனர். இதனால் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு பல ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது என்றால், திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது என தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது.

Suriya Retro Movie Will Release May 1st But Suriya Fans Being Silent Because Of Kanguva Disaster

சூர்யா ரசிகர்கள்: ரெட்ரோ பக்காவான ஆக்‌ஷன் படம் என ரசிகர்கள் பேசி வந்த நிலையில், ரெட்ரோ ஆக்‌ஷன் படம் இல்லை, இது காதல் படம் எனக் கூறினார் கார்த்திக் சுப்புராஜ். ஆனாலும் படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும்போது, படத்தில் தரமான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கப்சிப்: படத்தின் புரோமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் புக்கிங் தொடங்கியதும் நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. பாடல்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கிறது. இப்படி மொத்தமும் படத்திற்கு பாசிடிவாக இருக்கிறது என்றாலும், வழக்கத்தில் இருந்து ஒன்று மட்டும் குறைகிறது. அதாவது பொதுவாகவே ஒரு ஆக்‌ஷன் ஹீரோவின் படம் வெளியாகிறது என்றாலே படம் ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன்னர் இருந்தே, அவரது ரசிகர்கள் இணையத்தில் செம ஆக்டிவாக இருப்பார்கள். குறிப்பாக படத்தின் பெயர், கதாநாயகனின் பெயர் உள்ளிட்டவற்றை டிரெண்ட் செய்வார்கள்.

Suriya Retro Movie Will Release May 1st But Suriya Fans Being Silent Because Of Kanguva Disaster

காரணம்: ஆனால், நாளை ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகவுள்ளது. களத்தில் அதற்கான ஏற்பாடு பணிகளை படக்குழுவும், ரசிகர்களும் தீவிரமாக செய்து வருகிறார்கள். ஆனால் இணையத்தில் மட்டும் கப்சிப் என இருக்கிறார்கள். அதாவது ரெட்ரோ ஃபீவர் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஒரு வேளை சூர்யாவின் முந்தைய படமான கங்குவா வாங்கிய மரண அடி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும், சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த சூர்யா தனது ரசிகர்களிடம் இது தொடர்பாக ஏதாவது பேசி இருப்பாரோ என்ற கேள்வியும் திரைத்துறையில் பரவலாக பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X