சூர்யா அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தாரா?: கௌதம் மேனன் விளக்கம்

By Siva

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க தான் வாங்கிய அட்வான்ஸை சூர்யா திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக இருக்கும் அல்லது இருந்த படம் துருவ நட்சத்திரம். படத்திற்கு நாயகி தேடல் நடந்தது ஒரு பெரிய கதையாகும்.

சூர்யாவுடன் ஜோடி சேர த்ரிஷா போட்டிபோட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் நாயகி வாய்ப்பு அமலா பாலுக்கு சென்றது என்று பேசப்பட்டது.

த்ரிஷாவும் இல்லை, அமலாவும் இல்லை

த்ரிஷாவும் இல்லை, அமலாவும் இல்லை

சூர்யாவோடு நடிக்கப் போவது த்ரிஷாவும் இல்லை, அமலா பாலும் இல்லை சமந்தா என்றார்கள். ஒரு கட்டத்தில் சமந்தாவும் இல்லை என்றார்கள்.

அட படமே இல்லப்பா

அட படமே இல்லப்பா

நாயகி குழப்பம் பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தபோது துருவ நட்சத்திரம் படம் துவங்குவதே சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிப்பதாக சரத்குமார் அறிவித்தார்.

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த சூர்யா

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த சூர்யா

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க தான் வாங்கிய அட்வான்ஸை சூர்யா திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று நம்பத் தகுந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கௌதமோ இதை மறுக்கிறார். இதெல்லாம் வெறும் வதந்தி. படம் கைவிடப்படவில்லை என்கிறார் அவர்.

ஒரே குழப்பமா இருக்கே

ஒரே குழப்பமா இருக்கே

துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் துவங்கும் முன்பே இத்தனை குழப்பங்கள் உள்ளன. படத்தின் நாயகி யார் என்றே தெரியவில்லை. படம் கைவிடப்பட்டது என்கிறார்கள், இல்லை என்கிறார்கள் ஒரே குழப்பமாக இருக்கிறதே. இதற்கிடையே சூர்யா லிங்குசாமி படத்தில் தற்போது நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X