Suriya - ஜோதிகாவுடனான காதல்.. ஜெயலலிதாவிடம் காய் நகர்த்திய சூர்யா.. செம சம்பவம் உள்ளே

சென்னை: Suriya (சூர்யா) ஜோதிகாவுடனான காதலை ஜெயலலிதாவிடம் சொல்லி காய் நகர்த்தியிருக்கிறார் சூர்யா.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு திறமையை வளர்த்து டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக வருகின்றன. இதனால் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது.

Suriya Reveals unknown side of his love story

கங்குவா: கடைசியாக அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகிவிட்டு விலகினார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகவிருக்கிறதாம். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கிறார். இவ்விரண்டு படங்களுமே மெகா ஹிட்டாவது உறுதிதான் என இப்போதே பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இவை தவிர்த்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலுவுடன் ஒரு படத்தில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா - ஜோதிகா: இதற்கிடையே அவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். கோலிவுட்டில் அஜித் - ஷாலினிக்கு பிறகு ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஜோடி என்றால் சூர்யா - ஜோதிகாதான். இருவருக்குள்ளும் அன்பும், பரஸ்பர மரியாதையும் அவ்வளவு இருக்கும். ஆனால் இவர்களின் காதலை நீண்ட யோசனைக்கு பிறகே சூர்யா வீடு ஒத்துக்கொண்டது.

சூர்யா பேட்டி: இந்நிலையில் சூர்யா தனது காதல் குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவின் தலைமையில்தான் தங்கையின் திருமணம் நடந்தது. எங்கள் ஊரில் அதிகாலை 5.15 மணிக்கு முகூர்த்தம் வைப்பார்கள். ஜெயலலிதா சரியாக அந்த நேரத்துக்கு வந்துவிட்டார். தங்கையையும், மாப்பிள்ளையையும் ஆசீர்வதித்துவிட்டு சென்றார்.

செம ட்விஸ்ட்: அந்த சமயத்தில் அவரை காரில் ஏற்றிவிட உடன் சென்றேன். அப்போது அவர் என்ன சூர்யா உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார். இதுதான் சரியான நேரம் என நினைத்து, நான் ஜோதிகாவை காதலித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னேன். உடனே அவர் என்ன சிவக்குமார் என்று சொல்லி இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லி என்ன சிவக்குமார் என்று கேட்டார். உடனே அப்பாவோ இல்லை அம்மா என இழுத்தார். ஒருவழியாக காதலுக்கு வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். ஜெயலலிதாவும் எங்கள் திருமணத்துக்கு வந்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X