சூர்யாவின் கருப்பு.. சாட்டிலைட் உரிமம் எந்த சேனல் வாங்கியிருக்கிறது தெரியுமா?..வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. முதன்முறையாக பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. இப்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். அடுத்த வருடத்தில் படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

கங்குவா படத்தில் எதிர்பார்க்காத அடியை வாங்கிய சூர்யா அதிலிருந்து மெல்ல மீண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். சிவா இயக்கிய படத்தால் ஏற்பட்ட மோசமான விஷயங்களை ரெட்ரோ சரிக்கட்டும் என்று நம்பியிருந்தார். எப்போதும் க்ளாஸிக்காகவும், கமர்ஷியல் டச்சோடும் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஏனோ தெரியவில்லை பயங்கரமாகவே சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறினார்கள்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: அதேசமயம் இது அவ்வளவு ஒன்றும் மோசமில்லை; கங்குவா படத்துக்கு இது சூப்பர்தான் என்றும் ஒரு பேச்சு ஓடியது. அதுமட்டுமின்றி இன்னும் சில வருடங்கள் கழித்து ரெட்ரோவை கொண்டாடுவார்கள் பாருங்கள் என்று சிலர் சத்தியமும் செய்திருக்கிறார்கள். சூர்யா ஒரு தரமான ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இப்போது ஒரு அவசியமான ஹிட் தேவைப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார்.

Suriya RJ Balaji s Karuppu Satellite Rights bagged by Zee Tamil
Photo Credit:

பெரிய எதிர்பார்ப்பு: பாலாஜி ஏற்கனவே இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. சூர்யாவிடம் சொன்ன கதை நன்றாக இருக்கிறது என்றும்; இப்படத்தின் மீது சூர்யாவுக்கு ரொம்பவே நம்பிக்கை இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகிறார்கள். சூர்யாவை தாண்டி ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது ஆவல்தான் இருக்கிறது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் நல்ல ரெஸ்பான்ஸைத்தான் பெற்றிருக்கிறது.

சேட்டிலைட் உரிமம்: படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் படம் பற்றி புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் சேனல் வாங்கியிருக்கிறது. இந்த அறிவிப்பை அந்த சேனலில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோது வெளியிட்டார்கள்.

சூர்யாவின் லைன் அப்: முன்னதாக இப்படத்தின் ஓடிடி உரிமமும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. சூர்யாவின் அடுத்த படங்களை பொறுத்தவரை; வெங்கி அட்லூரி மற்றும் ஜித்து ஜோசப் ஆகியோரின் இயக்கங்களில் படங்கள் உருவாகவிருக்கின்றன. ஜித்து ஜோசப்புடனான படத்துக்கு சமீபத்தில்தான் பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X