விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் முக்கியமானதாக இருக்கும்..நடிகர் நரேன்!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்இப்பொழுது கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்
விக்ரமில் சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு இருக்க சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் நரேன் விக்ரமில் சூர்யாவின் ரோல் ரொம்ப Crucial - ஆ இருக்கும் என தெரிவித்துள்ளார்

மேக்கிங் வித்தியாசமாக
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக லோகேஷ் படங்களின் மேக்கிங் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத வகையில் இருப்பதால் இவருடைய படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

கைதி பாகம்-2 மிக விரைவிலேயே
மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து இயக்கிய கைதி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து இருப்பார். கதாநாயகி,குத்து பாட்டு என எந்த ஒரு இயல்பான காட்சிகளும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்டு கலக்கியது. கைதி திரைப்படம் இப்போது இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வருகிறது. கைதி பாகம்-2 மிக விரைவிலேயே தயாராகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்

விக்ரம்
முதல் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் பேன் இந்தியா இயக்குநராகவும் மாறிய லோகேஷ் கனகராஜ் இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நச்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வர பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஜூன் 3ம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்
Recommended Video

சூர்யாவின் ரோல் ரொம்ப Crucial - ஆ இருக்கும்
சர்ப்ரைஸாக விக்ரம் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் எதிர்பாராதவிதமாக கசிந்த நிலையில் அது எந்த மாதிரி கதாபாத்திரமாக இருக்கும் என ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் உருவகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நரேன் விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் ரொம்ப Crucial - ஆ இருக்கும் என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த இரும்புகை மாயாவி ட்ராப் ஆன நிலையில் சர்ப்ரைஸாக விக்ரம் படத்தில் சூர்யா இணைந்துள்ளது ரசிகர்களை பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











