Suriya Rolex: விரைவில் சூர்யாவின் ரோலக்ஸ்... ஆனால் இதுதான் பிரச்சினை... லோகேஷ் ஓபன் டாக்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

காஷ்மீரில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.

விரைவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ள லோகேஷ், ரோலக்ஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்திருந்த நிலையில், அதனை முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம்.

 கேமியோ ரோலக்ஸ்

கேமியோ ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் என மல்டி ஸ்டார் படமாக இது உருவாகியிருந்தது. முக்கியமாக இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் கேரக்டரில் என்ட்ரியான சூர்யா, மரண மாஸ் காட்டியிருந்தார். மொத்தமே 10 நிமிடங்கள் தான் என்றாலும், ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வகையில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் சம்பவம் செய்தது.

 சூர்யா நடிப்பில் ரோலக்ஸ்

சூர்யா நடிப்பில் ரோலக்ஸ்

மேலும், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இனி தனது படங்கள் LCU கான்செப்ட்டில் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார். இதனால், விக்ரம் படத்தின் 2ம் பாகத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரோலக்ஸ் டைட்டிலிலேயே ஒரு படம் இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படம் குறித்து அவரே அப்டேட்டும் கொடுத்துள்ளார்.

 பிரச்சினை இதுதான்

பிரச்சினை இதுதான்

ஏற்கனவே சூர்யாவுடன் தனியாக ஒரு படத்தில் இணைவேன் என லோகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், அதுபற்றி பேசியுள்ள லோகேஷ், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா 2 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தார். ஆனால், ரோலக்ஸ் கேரக்டரை பின்னணியாக வைத்து தனியாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால், மொத்தம் 150 நாட்கள் வரை ஷூட்டிங் நடத்த வேண்டியிருக்கும். அதற்கு சூர்யா ஓக்கே கூறிவிட்டால் நிச்சயம் ரோலக்ஸ் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

 லியோவில் ரோலக்ஸ்?

லியோவில் ரோலக்ஸ்?

இதனால் நிச்சயமாக சூர்யா - லோகேஷ் கூட்டணியில் ரோலக்ஸ் திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்ட லோகேஷ், இன்னும் 60 நாட்களில் ஷூட்டிங் மொத்தமாக முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளார். லியோ ரிலீஸுக்குப் பின்னர் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். இதனிடையே லியோ படத்திலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இதுகுறித்து லோகேஷ் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X