அய்யோ பாவம், ரூ. 6 லட்சம் செலவு செய்து வச்ச சூர்யா கட்அவுட் அகற்றம்
Recommended Video
திருத்தணி: என்.ஜி.கே. ரிலீஸை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் வைத்த 215 அடி கட்அவுட்டை முனிசிபாலிட்டி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் பிறர் படத்தை பற்றி குறை சொல்கிறார்கள்.

இதற்கிடையே என்.ஜி.கே. படத்தை கொண்டாடும் வகையில் சூர்யா ரசிகர்கள் திருத்தணியில் 215 அடியில் பிரமாண்ட கட்அவுட் வைத்தனர். திருத்தணி முனிசிபாலிட்டி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கட்அவுட்டை வைத்து கொண்டாடினார்கள்.
உயிருடன் இருக்கும் யாருக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த போதிலும் ரூ. 6 லட்சம் செலவு செய்து சூர்யாவுக்கு கட்அவுட் வைத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் பட ரிலீஸுக்கு முந்தைய நாள் அந்த கட்அவுட்டை முனிசிபாலிட்டி அதிகாரிகள் நீக்கிவிட்டனர்.
215 அடியில் கட்அவுட் வைத்து ஒட்டு மொத்த இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்தார்கள் சூர்யா ரசிகர்கள். இப்படிப்பட்ட பெருமையான நேரத்தில் கட்அவுட் அகற்றப்பட்டுள்ளது. கட்அவுட்டுக்கு மாலை போடுகிறேன், பாலாபிஷேகம் செய்கிறேன் என்று ரசிகர்கள் யாரும் அதில் ஏறி கீழே விழுந்து காயம் அடைவதை தவிர்க்கவே அதை அகற்றியுள்ளனர்.
நாங்கள் முறையாக அனுமதி பெற்றே கட்அவுட் வைத்தோம். இருப்பினும் அகற்றிவிட்டனர் என்று சூர்யா ரசிகர் மன்றத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முன்னதாக அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸானபோது விழுப்புரத்தில் அவரது கட்அவுட்டின் மீது ரசிகர்கள் ஏறியபோது அது சரிந்து விழுந்தது. அந்த விபத்தில் 3 ரசிகர்கள் காயம் அடைந்தனர்.
அதற்கும் முன்பு கடந்த 2014ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் கத்தி ரிலீஸையொட்டி விஜய்க்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது ரசிகர் ஒருவர் கீழே விழுந்தார். இது போன்ற விபத்துகளை தவிர்க்கவே சூர்யாவின் கட்அவுட்டை அகற்றியுள்ளனர்.
நடிகர்கள் பட ரிலீஸை முன்னிட்டு தங்களுக்கு பிரமாண்ட கட்அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்வதை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தாலும் அவர்கள் கேட்பது இல்லை.


Click it and Unblock the Notifications











