தூய்மை பணிக்காக நவீன வாகனம்..நன்கொடையாக வழங்கிய சிவக்குமார்!
சென்னை : கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்கி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக டாப் நடிகராக தனக்கென தனி இடத்தை நிரந்தரமாக தக்கவைத்திருப்பவர் நடிகர் சூர்யா.
இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது மட்டுமில்லாமல் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

அகரம் அறக்கட்டளை
நடிப்பில் மட்டும் இல்லை உதவி செய்வதிலும் செய்வதிலும் வல்லவராகவே இருக்கிறார். இவர் அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கல்வியை பாதியில் விடும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

நவீன தூய்மை வாகனம்
இந்நிலையில், நடிகர் சூர்யா கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்துக்கு நவீன தூய்மை வாகனத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மைகளை மேற்கெள்ள வாகனம் ஒன்று தேவை என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக வழங்கி உள்ளது.

சிவக்குமார் வழங்கினார்
இந்த வாகனத்தை நடிகர் சூர்யாவின் சார்பாக அவரது தந்தை நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார். 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வணங்கான்
நடிகர் சூர்யா தற்போது பாலாவின் கூட்டணியில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா பாலாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











