கார்த்தி படத்தைத் தயாரிக்கும் சூர்யா?
சென்னை: கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தை அவரது அண்ணன் சூர்யா தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
'தோழா' படத்திற்குப் பின் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காஷ்மோரா' தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கியிருக்கிறார்.

முதன்முறையாக கார்த்தி இதில் 3 கெட்டப்களில் நடித்திருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா,ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கார்த்தியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தியும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தற்போது சூர்யா கார்த்திக்கு ஏற்றவாறு ஒரு கதையைத் தேடி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்திலும், கார்த்தி இயக்குநர் மணிரத்னம் படத்திலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications