சூர்யா 46 படத்தின் பெயர் இதுதான்.. அட வித்தியாசமா இருக்கே.. கதை என்னவா இருக்கும்!
சென்னை: வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.
பான் இந்திய திரைப்படமாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளியானது. அந்த படத்தில் பாடல்கள் வெற்றிப்பெற்ற போதும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சூர்யா நடித்த இரு படங்களும் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் 'கருப்பு' படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்த்து காத்திருக்கின்றனர்.
கருப்பு: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மௌனம் பேசிய படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும் ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 'ஜனநாயகன்' படம் வெளியாக இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து படம் விரைவில் வெளியாக உள்ளது.

சூர்யா 46: கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தனுஷ் நடித்த வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை மனதில் இடம் பிடித்த வெங்கி அட்லூரி முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சற்று முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு "விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விலைரவில் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் ஜூலையில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு "விஸ்வநாத் & சன்ஸ்" என்ற டைட்டிலை பார்க்கும்போதே கதை நிச்சயமாக ஒரு பெரிய பணக்கார குடும்பம் மற்றும் கார்ப்பரேட் பற்றிய கதையாக தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











