Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விருமன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி சூர்யா கொடுத்த கமெண்ட்....அப்படி என்ன சொல்லிருக்கார்?
சென்னை : கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை பார்த்து விட்டு, நடிகர் சூர்யா போட்டுள்ள ட்வீட், செம டிரெண்டாகி வருகிறது. சூர்யாவின் கமெண்ட்டை ரீட்வீட் செய்து பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் விருமன். கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மிக்சிங்கா? காப்பியா?...விருமன் ப்ரோமோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

படம் எப்போ ரிலீஸ்
விருமன் படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிக்கப்பட்டு விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஜுலை மாதம் விருமன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட விருமன் ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்து விட்டு, இது மற்றொரு பருத்தி வீரனை போல் மாஸ் ஹிட் படமாக அமையும் என பலர் கருத்து கூறி இருந்தனர்.

ஆர்வம் காட்டும் ரசிகர்கள்
பருத்திவீரன் படத்திற்கு பிறகு பக்கா கிராமத்து கெட்அப்பில் கார்த்தி இந்த படத்தில் நடித்துள்ளார். அதிதி முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக கலக்கி உள்ளார். விருமன் படம் எப்போ ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சாப்பூவை கலாய்த்த நெட்டிசன்ஸ்
இந்நிலையில் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளிற்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த ஒரு நிமிட வீடியோ, முழுக்க முழுக்க கிராமத்து சூழலில், வித்தியாசமான இசையில், கஞ்சாப்பூ கண்ணாலே என் துவங்கும் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. மெலடி கலந்த, குத்துப்பாட்டாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு கார்த்தியும், அதிதியும் ஆட்டம் போட்டுள்ளனர்.

செம மிக்சிங்கா இருக்கேப்பா
ஆனால் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் காட்சிகள் பருத்திவீரன், கொம்பன் படங்களை மிக்ஸ் பண்ணி பார்த்தது போல் உள்ளது. கஞ்சாப்பூ கண்ணாலே பாடல், ஜெயம் ரவியின் தாஸ் படத்தில் வரும் சக்க போடு போட்டாளே பாடலை போலவும் உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தர்மதுரை படத்தில் மக்க கலங்குதப்பா வைப் இருக்கு இந்த பாடலை கேட்கும் போது என தெரிவித்துள்ளனர்.
|
சூர்யா என்ன சொல்லிருக்கார்
இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ப்பா விருமா...கலக்குதுப்பா...யுவன் இந்த பாடல் பிடித்துள்ளது. சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துக்கள் ப்ரோ. சூப்பர் டீம் ஒர்க் என குறிப்பிட்டுள்ளார். இதையும் நெட்டிசன்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.