முருகன் லுக்கிற்கு மாறிய சூர்யா....மெலடியான எதற்கும் துணிந்தவன் செகண்ட் சிங்கிள் வெளியானது
சென்னை : சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. செம மெலடியான இந்த பாடல் வெளியிடப்பட்ட 5 நிமிடத்திலேயே 500 பார்வைகளை அள்ளி அசத்தி உள்ளது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். ஆக்ஷன், த்ரில்லர் படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 4 ரிலீஸ்
சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய் ராஜ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போஸ்ட் ப்ரொடக்ஷன் முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படம் 2022 ம் ஆண்டு பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்
முதலில் கிறிஸ்துமசை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் பொங்கலுக்கு அஜித்தின் வலிமை உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீசை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

வாடா தம்பி
எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிசம்பர் 15 ம் தேதி வெளியிடப்பட்டது. வாடா தம்பி என துவங்கும் சூர்யா இன்ட்ரோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபஸ்ட் சிங்கிள் அதிரடி இசையுடன் வெளியிடப்பட்ட நிலையில் செகண்ட் சிங்கிள் செம மெலடியாக வெளியிடப்பட்டுள்ளது.
முருகன் கெட்அப்பில் சூர்யா
அழகா...அழகா...உள்ளம் உருகுதைய்யா என துவங்கும் இந்த பாடல் மெலடியாக மட்டுமல்ல செம ரொமான்டிக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் சூர்யா முருகன் வேடத்தில் தோன்றுகிறார். வித்தியாசமாக முருகன் கெட்அப்பில் சூர்யா தோன்றும் இந்த பாடலை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











