சும்மா வெறித்தனம் பாஸ்.. பட்டாசு, செண்டை மேளம், டிஜே என பட்டையை கிளப்பும் எதற்கும் துணிந்தவன் FDFS
சென்னை: கிட்டத்தட்ட 903 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் உலகம் முழுக்க இன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் என தென்னிந்திய தலைநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பல திரையரங்குகளில் காலை 5 மணிக்கே சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.
ஆனால், சில தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டு 8 மணிக்கு மற்றும் 9 மணிக்கு
த் தான் முதல் ஷோ என்றும் கூறி வருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் வந்துட்டான்
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் எளிய மக்களின் குரலாக ஒலித்த நடிகர் சூர்யாவின் அடுத்த மிரட்டலுக்கு ரசிகர்கள் தயாராகி உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், சரண், சிபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி உள்ளது.
Theri mass celebration kick-starts at Urvashi, Bangalore 🗡️#EtharkkumThunindhavan #ETFDFS
— Suriya Fans Club™ (SuriyaFansClub) March 10, 2022
pic.twitter.com/kVTZwObm9l
திருவிழாவான தியேட்டர்கள்
காப்பான் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என இரு நல்ல திரைப்படங்களும் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியானது சூர்யா ரசிகர்களை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மீண்டும் தியேட்டரில் சூர்யா படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், FDFS கொண்டாட்டத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பெங்களூரு ஊர்வசி தியேட்டரில் எப்படி பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்பதை பாருங்க!
. Alappuzha suriya_offl Fans Started Celebration..! #ETFDFS 🔥#EtharkkumThunindhavan #VaadiVaasal pic.twitter.com/DIPyPCHqZu
— Suriya Fans Rage™ (SuryaFansRage) March 9, 2022
கேரளாவில்
சூர்யாவின் கோடை என்றே அழைக்கப்பட்டு வரும் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் டிஜே எல்லாம் போட்டு ரசிகர்கள் வெறித்தனமாக நடனமாடி எதற்கும் துணிந்தவன் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
#ETFDFS celebration started SdcCinemas 🔥Suriya_offl Thalaiva🙏#EtharkkumThunindhavan#ET #Vaadivaasalrajsekarpandian pic.twitter.com/oXVJqV2iNQ
— மதுரை கிழக்கு தொகுதி சூர்யா நற்பணி இயக்கம் (Madurai_EastSFC) March 10, 2022
பாலாபிஷேகம்
மதுரை ரசிகர்கள் சூர்யாவின் போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுவரை எந்தவொரு சர்ச்சை சம்பவங்களையும் சூர்யா ரசிகர்கள் செய்ததாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கதை இப்பத்தான் ஆரம்பம்
ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சியை ரசிகர்கள் ஷேர் செய்து எதற்கும் துணிந்தவன் படத்தின் கதையே இப்பத்தான் ஆரம்பம், வேறலெவல் என கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் இன்ட்ரோ சீன் முதல் இன்டர்வெல் சீன் வரை வீடியோக்களாகவே எடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











