பீஸ்ட் அப்டேட் இல்லை.. சன் பிக்சர்ஸ் நாளைக்கு சூர்யா ரசிகர்களுக்கு என்ன ட்ரீட் தரப்போகுது தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் அப்டேட்டுக்காக சன் பிக்சர்ஸ் பக்கத்தை ரெஃபரஷ் செய்து வந்த ரசிகர்களுக்கு திடிரென நோட்டிபிகேஷன் வந்ததும் ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.

ஆனால், செம ட்விஸ்ட்டாக சன் பிக்சர்ஸ் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் பீஸ்ட் பக்கம் சன் பிக்சர்ஸ் திரும்புமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் அப்டேட்

சன் பிக்சர்ஸ் அப்டேட்

ரஜினிகாந்தின் அண்ணாத்த புரமோஷன்களை முடித்த நிலையில், அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் புரமோஷனை ஆரம்பித்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். இந்நிலையில், அதிரடியாக தற்போது சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

என்ன அப்டேட்

என்ன அப்டேட்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான வாடா தம்பி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், நாளை மாலை இரண்டாவது பாடலை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

நடிப்பின் நாயகன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை வெளியாகும் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ரொமான்டிக் பாடல்

ரொமான்டிக் பாடல்

இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகி உள்ள இந்த இரண்டாவது பாடலை பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கம் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். யுகபாரதி வரிகளில் ரொமான்டிக் பாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் தான் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

ஒடிடி நாயகனாக கடந்த இரு ஆண்டுகளாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வலிமையுடன் திரையரங்குகளில் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 4ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. ஓமிக்ரான் பரவல் அடுத்த ஆண்டும் படங்களின் வெளியீட்டிற்கு வேட்டு வைக்குமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

பீஸ்ட் அப்டேட் இல்லை

பீஸ்ட் அப்டேட் இல்லை

சன் பிக்சர்ஸ் போல போலியான ஐடிக்களில் பீஸ்ட் பாடல் குறித்த அப்டேட்டை விட்டு விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட்டை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் புத்தாண்டுக்கு வலிமை படத்தின் டிரைலர் வரவுள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பீஸ்ட் அப்டேட்டை வெளியிடுமா? அல்லது பிப்ரவரிக்கு பின்னர் தான் பீஸ்ட் அப்டேட்டா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X