சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் சூப்பராக வெளியான ’சும்மா சுர்ருன்னு’ லிரிக் வீடியோ!
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் 3வது சிங்கிள் 'சும்மா சுர்ருன்னு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி வருகிறது எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் அடிப்பாரா சூர்யா
சூரரைப் போற்று, ஜெய்பீம் என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நடிகர் சூர்யா ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனா காரணமாக படம் தள்ளிப் போகவும் வாய்ப்புகள் உள்ளன.

வெற்றி இயக்குநர்
பசங்க படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் பாண்டிராஜ் முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தார். வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள வெற்றி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாக காத்திருக்கிறது எதற்கும் துணிந்தவன்.

டாக்டர் ஹீரோயின்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த செல்லம்மா சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இரண்டாவது சிங்கிளான உள்ளம் உருகுதய்யா பாடலில் ராணி காஸ்ட்யூமில் கலக்கிய பிரியங்கா அருள் மோகன் சும்மா சுர்ருன்னு பாடலில் செம டான்ஸ் ஆடியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வரிகளில்
செம ஸ்டைலாக இளைஞர்களை கவரும் வார்த்தைகளை போட்டு பாடல்களை எழுதி வரும் சிவகார்த்திகேயன் எதற்கும் துணிந்தவன் படத்தில் சும்மா சுர்ருன்னு பாடலை எழுதி உள்ளார். அந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.
வேற லெவல் சூர்யா
சிலுக்கு ஜிப்பா சட்டைப் போட்டு என ஆரம்பிக்கும் சும்மா சுர்ருன்னு பாடலில் வேற லெவல் எனர்ஜியுடன் இளமை துள்ளல் ஆட்டம் போட்டுள்ளார் நடிகர் சூர்யா. இமான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை அர்மான் மாலிக் மற்றும் நிகிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

பீஸ்ட் அப்டேட்
புத்தாண்டு மற்றும் இந்த பொங்கலுக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் விஜய்யின் பீஸ்ட் பட அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதே சமயம் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பரான பொங்கல் பரிசு கிடைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











