அந்த அண்ணே வாய்ஸ்.. பொள்ளாச்சி சம்பவம் தான் கதையா? எதற்கும் துணிந்தவன் டீசர் விமர்சனம்!

சென்னை: என் கூட இருக்கிறவங்க எதுக்கும் பயப்படக் கூடாது என டீசரின் கடைசியில் சூர்யா பேசுவது முதல் அந்த அண்ணே வாய்ஸ் வரை எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏகப்பட்ட பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என அடுத்த அடுத்த மாதங்கள் இரு பெரிய படங்கள் ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்ய போவது கன்ஃபார்ம்.

தியேட்டரில் சரவெடி

தியேட்டரில் சரவெடி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூரரைப் போற்று, ஜெய்பீம் என நடிகர் சூர்யாவின் படங்கள் ஒடிடியில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், ரசிகர்களின் ஆரவாரத்துடன் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாக போகிறது.

சூரசம்ஹாரம் செய்யும் சூர்யா

சூரசம்ஹாரம் செய்யும் சூர்யா

இந்நிலையில், அதற்கான புரமோஷனாக தற்போது எதற்கும் துணிந்தவன் டீசரை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. கையில் வாளுடன் சூரசம்ஹாரம் செய்ய நடிகர் சூர்யா தயாராகி விட்டார் என்பது டீசரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெளிவாகத் தெரிகிறது. கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்கள் காமெடி நிறைந்து இருந்த நிலையில், இந்த படம் ஆக்‌ஷன் நிறைந்திருக்கும் என தெரிகிறது.

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

டீசரில் இடம்பெற்ற அந்த அண்ணே வாய்ஸ் மற்றும் டீசரின் இறுதியில் ஒரு பெண் சூர்யா அருகே நின்றிருக்க அவருக்காக மற்றவர்களை அடித்துப் புரட்டியெடுக்கும் சூர்யாவின் ஆக்‌ஷன் பிளாக்குகளை பார்த்தால், பொள்ளாச்சியில் இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்த கதையை தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சமூகம் சார்ந்த சர்ச்சையான கதைகளை சூர்யா படமாக்கி வருவதால், நிச்சயம் இந்த படத்திலும் அந்த விஷயத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை பாண்டிராஜ் நிச்சயம் புரிந்து வைத்திருப்பார்.

அந்த 3 இளைஞர்கள்

அந்த 3 இளைஞர்கள்

டீசரின் ஒரு காட்சியில் மூன்று இளைஞர்கள் செல்போனை பார்க்கும் காட்சியும், கம்ப்யூட்டரில் வாய்ஸ் அனலைஸ் பண்ணுவது போன்ற ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அந்த மூவரில் வடசென்னை மற்றும் நெற்றிக்கண் நடிகர் சரண் தெளிவாக தெரிகிறார். பிக் பாஸ் சிபியும் இந்த படத்தில் வினய் உடன் அமர்ந்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தில் ஹீரோவுடன் இருந்த சிபி இந்த படத்தில் வில்லன் உடன் உள்ளார்.

டாக்டர் வில்லன்

டாக்டர் வில்லன்

சாக்லேட் பாய் ஹீரோவாக நடித்து வந்த 'உன்னாலே உன்னாலே' வினய் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் செம ஸ்மார்ட்டான வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவர் தான் இன்பா எனும் கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.

டாக்டர் ஹீரோயின்

டாக்டர் ஹீரோயின்

வில்லன் மட்டுமில்லை எதற்கும் துணிந்தவன் படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனும் டாக்டர் படத்தில் நடித்தவர் தான். இந்த விஷயம் மட்டும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிளஸ் ஆக இருக்குமா? அல்லது மைனஸ் ஆக இருக்குமா? என்பது திரைக்கதையை பொறுத்துத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X