சூர்யா ஃபேன்ஸ் ரெடியா இருங்க...இன்னைக்கு செம ட்ரீட் காத்திருக்கு

சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படத்தின் அடுத்த அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. இதனால் இதைக் கொண்டாட சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 படத்திற்கு பிறகு சூர்யா மீண்டும் இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ராய், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தின் மோஷன் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா, சும்மா சுருன்னு ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக போகும் படம் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது.

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய பல தகவல்கள் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்தது. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

தள்ளி போன ரிலீஸ்

தள்ளி போன ரிலீஸ்

வழக்கமாக குடும்ப, சென்டிமென்ட் படங்களையே இயக்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் வித்தியாசமாக ஆக்ஷன், த்ரில்லர் கதையை இயக்கி உள்ளாார். 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டே எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அல்லு அர்ஜுனின் புஷ்பா, ஸ்பைடர்மேன், மார்வேல்ஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. கிறிஸ்துமசிற்குள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்க முடியாமலும் போனது.

கன்ஃபார்ம் ஆன ரிலீஸ் தேதி

கன்ஃபார்ம் ஆன ரிலீஸ் தேதி

முதலில் பிப்ரவரி 4 ம் தேதி எதற்கம் துணிந்தவன் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஊரடங்கு காரணமாக பல படங்கள் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்ததால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. பிப்ரவரி 11-ம் தேதி எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மார்ச் 10-ம் தேதி எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்தது சன் பிக்சர்ஸ்.

இன்று செம ட்ரீட் இருக்கு

இன்று செம ட்ரீட் இருக்கு

இந்நிலையில் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டாக எதற்கும் துணிந்தவன் படத்தின் தீம் மியூசிக்கை இன்று வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தீம் மியூசிக் வெளியிடப்பட உள்ளதால் அதை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X