காய்த்த மரம் தான் கல்லடிப்படும்.. எதற்கும் துணிந்தவன் படக்காட்சி திடீர் ரத்து.. போலீசார் குவிப்பு !

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பா.ம.கவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திரைப்படத்தை திரையரங்க நிர்வாகம் ரத்து செய்தது.

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படத்தை திரையில் பார்க்கலாம் என, சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்த வேளையில் படம் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் திரையரங்க நிர்வாகத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திரையரங்கம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெய்பீம் சர்ச்சை

ஜெய்பீம் சர்ச்சை

காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பது போல சமூக அக்கறையோடு சூர்யா நடித்து வரும் படங்கள் கல்லடிபட்டு வருகின்றன. சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதாலும், இருளர் சமுகத்தினருக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்த படம் என்பதால் பலரின் பாராட்டை பெற்றது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இத்திரைப்படத்தில், வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை வில்லன் வீட்டு காலண்டரில் காட்டி இருந்தனர், மேலும், வில்லன் கதாபாத்திரத்தின் பேரும் குருமூர்த்தி என இருந்ததால் பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரையிடக்கூடாது

திரையிடக்கூடாது

இதற்காக படத்தின் இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரி படத்தில் இருந்த சர்ச்சை காட்சியை நீக்கிவிட்டார். ஜெய்பீம் சர்ச்சைக்கு இதுநாள் வரை சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்பதால், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தமிழ்நாடு முழுக்க திரையிடக்கூடாது என கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவரிடம் மனு அளித்தனர்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

பெரும்பாலான திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தர்மபுரி, செஞ்சி, விழுப்புரம் போன்ற ஊர்களில் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

தர்மபுரி மாவட்டம், டிஎன்சி தியேட்டரில், சூர்யா நடித்த எதற்கு துணிந்தவன் படம் வெளியாக இருந்தது, காலை காட்சி திரையிட, ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர், சூர்யா நடித்த திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிட கூடாது என பாமகவினர் அரூர் போலீசில் புகார் கொடுத்து இருந்தனர், டி.என்.சி தியேட்டர் முன்பு , காலை காட்சி பார்க்க ,சூர்யா ரசிகர்கள் திரண்டு இருந்தனர், ஆனால், திடீரென காலை காட்சி ரத்து என அறிவிக்கப்பட்டதால்,ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்டது, இதையடுத்து, தியேட்டர் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

போஸ்டரை கிழித்தனர்

போஸ்டரை கிழித்தனர்

அதேபோல, செஞ்சி சரவண திரையரங்கத்தில் இன்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட இருந்த நிலையில், திரையரங்கம் முன்பு 20க்கும் மேற்பட்ட பாமகவினர் திரையரங்கில் குவிந்து போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செஞ்சியிலும் காட்சி ரத்து செய்யப்பட்டு போலீசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X