கொல மாஸ் சாரே... இரண்டு உருவம்... இரண்டு அர்த்தம் காட்டும் எதற்கும் துணிந்தவன்

சென்னை : பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40 வது படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 46 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஃபஸ்ட்லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

எதற்கும் துணிந்தவன் ஃபஸ்ட்லுக்

எதற்கும் துணிந்தவன் ஃபஸ்ட்லுக்

மிரட்டலான இசையின் பின்னணியில், இருட்டு அறையில், முகத்தில் ரத்தக்கரை, ஆக்ரோஷம், கையில் நீண்ட வாள் உடன், சூர்யா ஒருவரை இழுத்து செல்வது போலவும், நடந்து செல்வது போலவும் இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு உருவத்தில் சூர்யா

இரண்டு உருவத்தில் சூர்யா

39 வீடியோவாக வெளியாகி உள்ள இந்த ஃபஸ்ட்லுக்கின் துவக்கத்தில் சூர்யா திரும்பி நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவரின் உடலில் இரண்டு உருவங்கள் இருப்பது போன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் வேஷ்டி சட்டை அணிந்து நிற்பது போலவும், மற்றொரு உருவம் பேண்ட் சட்டையில் இருப்பது போல உள்ளது.

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா

பேண்ட் சட்டையில் மாடலாக இருக்கும் உருவத்தின் கையில் நீண்ட சங்கிலியும், வேஷ்டி சட்டையில் நீண்ட தலைமுடியுடன் வரும் சூர்யா கையில் நீண்ட வாளுடன் வருவது போல் உள்ளது. இதன் மூலம் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலுக்கு ஈட்டி அர்த்தமும் உண்டு

டைட்டிலுக்கு ஈட்டி அர்த்தமும் உண்டு

இதே போல் படத்தின் டைட்டிலும் இரண்டு அர்த்தங்களை கொண்டதாக உள்ளதாக ET - எதற்கும் துணிந்தவன் என காட்டப்பட்டுள்ளது. இது ஆங்கில ET ஆ அல்லது ஈட்டியா என தெரியவில்லை.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X