Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒண்ணுகூடிட்டாங்கய்யா..! டிஜிட்டல் ரிலீஸ்.. சூர்யா படங்களுக்கு இவங்களும் தடை விதிக்கிறாங்களாம்!
திருவனந்தபுரம்: தமிழ்நாடு தியேட்டர்கள் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நடிகர் சூர்யாவின் படங்களுக்கு இவர்களும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதை ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.
இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
லாக்டவுன்
இந்த படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. லாக்டவுன் நீட்டிப்பதால், தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பொன்மகள் வந்தாள்
இதனால், படங்களை நேரடியாக OTT -யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்ய படக்குழு விற்றுள்ளது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
கண்டிக்கிறோம்
இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் கூறும்போது, இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி சூர்யா தயாரிக்கும் படங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய படங்களை OTT -யிலேயே வெளியிட்டுக் கொள்ளுமாறு கூறி விட்டோம்' என்றார். இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஏமாற்றம்
லாக்டவுன் முடிந்த இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஆதரவாக, கேரள தியேட்டர்கள் உரிமையாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கேரளாவிலும் சில சிறுபட்ஜெட் படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புறக்கணிக்க முடிவு
அப்படி டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த தயாரிப்பாளர்களுக்கு எதிராகவும் நடிகர் சூர்யாவின் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யாமல் புறக்கணிக்கவும் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!