Suriya :கென் கருணாஸ் நல்லபடியாக பிறக்க முட்டிப்போட்டு வேண்டிய சூர்யா.. இப்படி எல்லாம் நடந்திருக்கா?
சென்னை: நடிகர் கென் கருணாஸ் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். தற்போது கதாநாயகனாகவும் இயக்குநராகவும் யூத் படத்தின் புது அத்தியாயத்தை தொடங்கி உள்ளார். இவரது இந்த படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வார இறுதிக்குள் படம் எப்படியும் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து விடும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ், சூர்யாவின் சிங்கம் படத்தின் புரோமோசனின் போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கருணாஸ் பேசுகையில் சூர்யா செய்த ஒரு செயல் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கருணாஸ் பேசுகையில், " நான் சினிமாவில் அப்போதுதான் முதன் முதலாக நடிக்க வந்துள்ளேன். எனது மனைவி கிரேஸ் 9 மாத நிறைமாத கர்ப்பிணி. எனது மகன் கென் வயிற்றில் இருக்கிறான். அப்போது எனக்கு சினிமா ( நந்தா படம்) வாய்ப்பு கிடைத்ததால் நடிக்க வந்தேன். நான் நடிகர் சூர்யாவுடன் தான் தூங்குவேன், அவருடன் தான் எப்போதும் இருப்பேன்.

ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கொஞ்சம் தூரம் சென்று நான் தனியாக அமர்ந்து அழுது கொண்டு இருந்தேன். நிறைமாத மனைவியை இப்படி தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டேனே, குழந்தை பிறக்கும் போது ஒரு கணவனாக, அப்பாவாக நான் அங்கு இருக்க வேண்டும் தானே, இருக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு அழுது கொண்டு இருந்தேன்.
சூர்யாவின் இளகிய மனம்: நான் அழுது கொண்டு இருந்ததைப் பார்த்த சூர்யா உடனே என்னை அழைத்து விஷயம் என்ன என்று கேட்டார். நானும் சொன்னேன். மறுநாள் காலையில் சுமார் 4.30 மணிக்கே என்னை எழுப்பி, குளிக்க வைத்து, அருகில் இருந்த ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்துச் சென்று, குழந்தை நன்றாக பிறக்கும் என்று வேண்டிக் கொள் என்று சொன்னது மட்டுமல்லாமல், எனக்காகவும் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காகவும் மண்டிபோட்டு வேண்டிக் கொண்ட, நல்ல உள்ளம் கொண்ட மனிதன் சூர்யா" என்று பேசினார்.

ரியாக்ஷன்: அவரது இந்த பேச்சு தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களும் நெட்டிசன்களும் சூர்யாவை பாராட்டி வருகிறார்கள். அதுவும், குடும்பத்தை பிரிந்து, நிறைமாத கர்ப்பிணியை பிரிந்து ஒரு ஆண் தொழிலுக்காக வந்துள்ள இடத்தில் குடும்பத்தை நினைத்து வருத்தப்படுகையில், அவருக்கு ஆறுதலாக நின்று, ஒன்றும் இல்லை, எல்லாம் நல்லபடியாக நடக்கும். கவலைப் பட வேண்டாம் என்று கூறும் எண்ணம் சூர்யாவுக்கு இயல்பிலேயே இருக்கிறது. சக மனிதர்களிடத்தில் அன்பு பாராட்டும் எண்ணம் சூர்யாவுக்கு அடிப்படையிலேயே இருப்பதால் தான், அகரம் போன்ற ஒரு கல்வி அறக்கட்டளையை நடத்த முடிகிறது என்றும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











