பாதிக்கப்பட்டவங்க யாரா இருந்தாலும் நீதி வேண்டும் சூர்யாவின் கர்ஜனையுடன் வெளியானது ஜெய் பீம் டிரைலர்!
சென்னை : அனல் பறக்கும் வசனத்துடன் ஜெய் பீம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தை தா செ ஞானவேல் இயக்கி உள்ளார்.
இதில் முக்கியமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

ஜெய் பீம்
சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய் பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஒரு உண்மை சம்பம்
ஜெய்பீம் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலர் ரிலீஸ்
சூர்யாவின் 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ந் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. சட்டம் ஒரு பவர்புல் ஆயுதம்... நாம் அதை யாரைக் காப்பாத்து என்பது தான் முக்கியம் என்ற அனல் பறக்கும் வசனத்துடன் ஜெய் பீம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவதும், ஒரு ஆள்மேல ஒரு வழக்கு தான் போடனும்னு சட்டம் இருக்கா என்ன... தலைக்கு 2 கேஸ் போட்டு விடுங்க என்ற வசனங்களும், பாதிக்கப்பட்டவங்க யாரா இருந்தாலும் எத்தனை பேரா இருந்தாலும் அவங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சூர்யா கர்ஜிக்கிறார். சரியாக 6 மணிக்கு வெளியான இந்த டிரைலரை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர் கடந்த வரம் இப்படத்தில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய ரோலில்
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் படப்புகழ் ரஜினா விஜயன், சிவப்ப மஞ்சள் பச்சை திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக நடித்த லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், அருண் விஜய்யின் மகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











