twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய்பீம் பட விவகாரம்..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    |

    சென்னை : ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ஜெய்பீம்.

    இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது.

    கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்துகோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    ஜெய்பீம் திரைப்படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதை அளவுக்கு பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தில் இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில்,அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமி காலெண்டரும் மற்றம், குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

    சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

    தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுவிட்டது

    சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுவிட்டது

    இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    Yenni Thuniga Movie Review | Yessa ? Bussa ?| Yenni Thuniga|Jai|*Review
    வழக்கு ரத்து

    வழக்கு ரத்து

    இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Suriya jai bhim case has been dismissed by Chennai high court
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X