சூர்யா நடிக்கும் ஜெய்பீம் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மூலம் பல தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வக்கீலாகவும் நடித்துள்ளார்.

பழங்குடியின மக்களை பற்றிய திரைப் படமாக இப்படம் உருவாகி இருக்க இப்பொழுது அதன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில்

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில்

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் கீழ் பல தரமான திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வெளியாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே படமும் அடுத்து வெளியாக உள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் என்ற படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

பழங்குடியின பெண்ணுக்கு நியாயம்

பழங்குடியின பெண்ணுக்கு நியாயம்

பழங்குடியின மக்களின் வாழ்க்கை நிலையும் அவர்களுக்கு முறையாக கிடைக்கவேண்டிய உரிமைகளையும் பற்றி பேசும் படமாக ஜெய்பீம் உருவாகி உள்ளது. பழங்குடியின மக்கள் வாழும் ஒரு மலை கிராமத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒருவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. எனவே கணவரை மீட்டுத்தருமாறு போராடும் அந்தப் பெண்ணுக்கு நியாயம் பெற்றுத் தரும் நேர்மையான வக்கீலாக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

முதல் முறையாக வக்கீலாக

முதல் முறையாக வக்கீலாக

சூர்யா இதுவரை பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முதல் முறையாக இந்த படத்தில் வக்கீலாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் சந்துரு என வைக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மணிகண்டன், கர்ணன் பட புகழ் ரஜிஷா விஜயன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நவம்பர் 2 ரிலீஸ்

நவம்பர் 2 ரிலீஸ்

சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானதை அடுத்து சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்களும் ஓடிடிக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது ஜெய்பீம் திரைப்படமும் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X