twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு சூர்யாவின் ’ஜெய்பீம்’ தேர்வு.. RRR படமும் லிஸ்டில் இருக்கு!

    |

    சென்னை: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் இந்திய பனோராமா பட்டியலுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது.

    IFFI 2022 எனப்படும் இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளது.

    இயக்குநர் ராஜமெளலியின் RRR, காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்களும் இந்த பனோரமா பட்டியலில் தேர்வாகி உள்ளன...

    தம்பி கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதும் பிரின்ஸ்… சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா!தம்பி கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதும் பிரின்ஸ்… சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா!

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சனிக்கிழமையான இன்று சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வான படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 25 பெரிய படங்களும், 20 குறும்படங்களும் இந்த விழாவில் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யாவின் ஜெய்பீம்

    சூர்யாவின் ஜெய்பீம்

    இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஏற்கனவே ஏகப்பட்ட அங்கீகாரங்களை சர்வதேச அளவில் பெற்று வரும் நிலையில், சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடும் படங்களின் பட்டியலிலும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது மேலும், ஒரு மகுடம் சூடியது போல உள்ளது என சூர்யா ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    தேசிய விருது

    தேசிய விருது

    சூரரைப் போற்று படத்திற்கே 6 தேசிய விருதுகளை சூர்யாவின் படக்குழுவினர் அள்ளிய நிலையில், ஜெய்பீம் படத்திற்கும் தேசிய விருதுகள் பல கிடைக்கும் என எதிரபர்க்கப்படுகிறது. ஆஸ்கர் வரை நல்ல அங்கீகாரம் இந்த படத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவை தவிர மணிகண்டன், லிஜிமோல் ஜோஷ் என ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.

    ஆர்ஆர்ஆர்

    ஆர்ஆர்ஆர்

    இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்களும் இந்திய பனோரமா சார்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போகிறது என்கிற அறிவிப்பும் சனிக்கிழமையான இன்று வெளியாகி உள்ளது.

    எப்போ ஆரம்பம்

    எப்போ ஆரம்பம்

    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 53வது சர்வதே இந்திய திரைப்பட விழா வரும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 10 இந்தி படங்களும், தமிழ் மற்றும் தெலுங்கில் தலா 4 படங்களும், 2 பெங்காலி படங்களும், 7 ஆங்கில படங்களும் கன்னடம் மற்றும் மலையாளத்தில் இருந்து மொத்தம் 3 படங்களும் 5 மராத்தி படங்களும் மற்ற இந்திய மொழி படங்களில் இருந்து தலா ஒரு படமும் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Suriya's JaiBhim, SS Rajamouli's RRR and Kashmir Files are in the official selection list of Indian Panorama 2022.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X