IMDb லிஸ்டில் முதலிடத்தில் ஜெய்பீம்...ரேட்டிங்கை கேட்டா அசந்துடுவீங்க

சென்னை : டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ஜெய்பீம். இந்த படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.

சூர்யா முதல் முறையாக வக்கீல் ரோலில் நடித்துள்ள படம் இது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு சட்ட ரீதியிலான நீதி கிடைக்க போராடுவது தான் படத்தின் கதை. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

பாராட்டை பெறும் ஜெய்பீம்

பாராட்டை பெறும் ஜெய்பீம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் ஜெய்பீம் படத்தையும், சூர்யாவையும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல உண்மை சம்பவங்களை ஜெய்பீம் வெளிக் கொண்டு வந்திருப்பதால், இந்த படத்திற்கு ஆதரவை பெருக வைத்துள்ளது.

குவியும் உதவிகள்

குவியும் உதவிகள்

ஜெய்பீம் படத்தில் நடித்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் நலத்திட்டங்களுக்கு ரூ.1 கோடியை முதல்வரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா. இந்த படத்தின் வரும் ராஜாக்கண்ணு குடும்பத்திற்காக தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று அறிவித்துள்ளார்.

IMDb ல் ஜெய்பீம்

IMDb ல் ஜெய்பீம்

இந்நிலையில் சர்வதேச படங்களுக்கு ரேட்டிங் வழங்கும் IMDb, டாப் 250 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் அதிகமாக பார்க்கப்பட்டது, அதிகம் விமர்சிக்கப்பட்டது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் IMDb படங்கள், டிவி ஷோக்கள் உள்ளிட்டவைகளுக்கு ரேட்டிங் வழங்கி வருகிறது. இதில் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இவ்வளவு ரேட்டிங்கா

இவ்வளவு ரேட்டிங்கா

சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் IMDb ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்திருந்தது. ஆனால் ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்க 9.6 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து The Shawshank Redemption, The Godfather, The Dark Knight உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.

ரேட்டிங்கில் முந்திய ஜெய்பீம்

ரேட்டிங்கில் முந்திய ஜெய்பீம்

இதற்கு முன் 2018 ல் பரியேறும் பெருமாள், 96 ஆகிய படங்கள், 2019 ல் அசுரன், 2020 ல் சூரரைப் போற்று, 2021 ல் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் IMDb ரேட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் சர்வதேச படங்கள் பலவற்றை பின்னுக்கு தள்ளி, ஜெய்பீம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இதற்காக படக்குழுவினர், சூர்யா ஆகியோருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் செம ஹிட்டாவதுடன் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று வருவதால் சூர்யா நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்க துவங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X