அட கடவுளே.. மறுபடியும் அவர்கிட்டவே தோற்றுப் போன சூர்யா.. வசூல் விவரத்தை கேட்டு பெரும் அதிர்ச்சி!

நடிகர் சூர்யா நடித்த காப்பான் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வருகிறது.

Recommended Video

காப்பானை யாராவது காப்பாற்றுங்கள்..! கதறும் சூர்யா ரசிகர்கள் !

சென்னை: நடிகர் சூர்யா நடித்த காப்பான் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வருகிறது. அதே சமயம் ஒத்த செருப்பு படம் அதை விட நல்ல வசூல் பெற்று ஓடி வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பான் மற்றும் ஒத்த செருப்பு இரண்டு படங்களும் வெளியானது. காப்பான் வெளியான முதல் நாளே மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.

அதே சமயம் ஒத்த செருப்பு படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் இருக்கும் திரில் அம்சத்தால் இதை பலர் புகழ்ந்து தள்ளி இருந்தனர்.

எவ்வளவு

எவ்வளவு

காப்பான் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த காசை இன்னும் விநியோகஸ்தர்கள் எடுக்கவில்லை. ஆம் இதுவரை 17 கோடி ரூபாய்தான் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாஸ் படத்திற்கு இணையாக மிக குறைவான வசூலை இந்த படம் பெற்றுள்ளது.

தெலுங்கு மோசம்

தெலுங்கு மோசம்

இந்த படம் தெலுங்கில்தான் மிக மிக மோசமான வசூலை பெற்று இருக்கிறது.தெலுங்கில் சூர்யா நடித்து வெளியான படங்களில் இந்த படத்தின் வசூல்தான் மிகவும் குறைவானது ஆகும். தெலுங்கில் காப்பான் படம் பிளாப் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பார்த்திபனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. படத்தில் நல்ல கதை இருக்கிறது. நிறைய வித்தியாசமான டிவிஸ்ட் காட்சிகள் உள்ளது. பார்த்திபன் நடிப்பு நன்றாக உள்ளது என்று விமர்சனங்கள் வருகிறது.

என்ன வசூல்

என்ன வசூல்

இந்த நிலையில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பட்ஜெட் தொகையை விட அதிகமாக வசூலிக்கும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மூலம் லாபம் என்று கூறுகிறார்கள்.

எப்படி வந்தது

எப்படி வந்தது

சென்னையில் மட்டும் ஒத்த செருப்பு படம் 1 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டது. தமிழகம் முழுக்க 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்

இதற்கு முன்

இதேபோல் இதற்கு முன் அஞ்சான் படம் 2014 ம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் ஒரு வாரம் மட்டுமே தியேட்டரில் இந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மோசமாக பிளாப் ஆனது. அஞ்சான் படத்துடன் சேர்த்து ஆர். பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானது. இந்த படம் பார்த்திபனுக்கு பெரிய கம் பேக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X