Kaappaan Teaser புலியாக மாறிய சிங்கம்: சூர்யாவுக்கு ஒரு ஹிட் பார்சல்

By Siva

Recommended Video

Actor Suriya Kaapaan Movie Reaction: காப்பான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது- வீடியோ

சென்னை: சூர்யாவின் காப்பான் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

டீஸரை பார்த்தாலே சூர்யா ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் காத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சூர்யா

சூர்யாவை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக பார்க்க நன்றாக உள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தை காட்டியிருப்பது ஆறுதலானது. ஆர்யா சயீஷாவை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்பது சுவாரஸ்யம். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தான் ஆர்யா, சயீஷா திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால்

மோகன்லால்

சூர்யாவின் பலவகை கெட்டப்புகளை பார்க்கும்போது படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. நீங்க சீண்டி இருக்குறது அமைதியா படுத்து இருக்குற புலிய, பாயுறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது என்று பன்ச் வசனம் பேசியுள்ளார் மோகன்லால். படத்தில் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது என்பது நன்றாகத் தெரிகிறது. சூர்யாவுக்கு ஒரு ஹிட் பார்சல்.

26 லட்சம்

காப்பான் டீஸரை யூடியூபில் இதுவரை 26 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மரண வெயிட்டிங். டீஸரை பார்க்க ரோகினி தியேட்டரில் சுமார் ஆயிரம் பேர் கூடி அசத்திவிட்டனர்.

பெருமை

பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ள சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் வந்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X