நூறு கோடி வசூல் லிஸ்ட்டில் இணைந்த சூர்யாவின் காப்பான் - கேக் வெட்டி கொண்டாட்டம்

Recommended Video

காப்பானை யாராவது காப்பாற்றுங்கள்..! கதறும் சூர்யா ரசிகர்கள் !

சென்னை: சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான காப்பான் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த நன்றி அறிவிக்கும் விழாவில் இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, நடிகை ஆயிஷா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடினர்.

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் காப்பான். கலவையான விமர்சனங்கள் தாண்டியும் இந்த படம் நல்ல வசூல் ஈட்டிவந்தது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அதில் சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

Suriyas Kappan in 100 crore club

இந்த நிலையில் இது குறித்து லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 'அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌.. எங்கள்‌ மகிழ்வான வணக்கம்‌. எங்கள்‌ இதயங்களில்‌ நிறைவும்‌, உதடுகளில்‌ புன்னகையும்‌ உங்களால்‌ சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின்‌ வெற்றி என்பது சகஜமானது. ஆனால்‌ சாதனை வெற்றியென்பது அபூர்வமானது.

எங்கள்‌ லைகா நிறுவனத்தின்‌ தயாரிப்புகளில்‌ நற்பெயரும்‌, நல்ல வசூலும்‌ தேடித்‌ தந்தது காப்பான்‌ திரைப்படத்தின்‌ முதல்‌ சாதனை. கேரளாவிலும்‌, அயல்‌ நாடுகளிலும்‌ அதிரிபுதிரியான வசூல்‌ கொண்டாட்ட சாதனை.மொத்த வசூலில் 100 கோடியைத்‌ தொட்ட படங்களின்‌ பட்டியலில்‌ காப்பானும்‌ சேர்ந்ததும்‌ முக்கிய சாதனை.

தமிழக விவசாய அமைப்புகள்‌ அனைத்திலிருந்தும்‌ ஏகோபித்த பாராட்டுக்களைப்‌ பெற்றது மகத்தான சாதனை. அத்தனைத்‌ தரப்பு ரசிகர்களிடமிருந்தும்‌ குவியும்‌ பாராட்டுக்கள்‌ இன்னுமொரு சாதனை. இத்தனை சாதனைகளுக்கும்‌ காரணமாய்‌ இருந்த காப்பானின்‌ அத்தனை நடிகர்களுக்கும்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களுக்கும்‌, திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும்‌, திரையரங்க உரிமையாளர்களுக்கும்‌, இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும்‌ எங்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி.

சூர்யா நடித்த 7ம் அறிவு, சிங்கம் 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம்,என்.ஜி.கே ஆகிய படங்களின் வரிசையில் தற்போது காப்பான் படம் . 100 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்துள்ளது என்று சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X