Karuppu Day 5 Box Office - கருப்பு 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி ரூபாயை நெருங்குது
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மே 15ஆம் தேதி வெளியான இப்படத்துக்கு விமர்சன ரீதியாக சூப்பர் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வந்திருக்கின்றன.
மூக்குத்தி அம்மனை இயக்கியும், எல்கேஜி படத்துக்கு கதை எழுதியும் வெற்றியடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அவர் பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க பிளான் செய்து விஜய்யிடம் கதை சொன்னார். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக; சூர்யாவுக்கு சென்றது. சூர்யா ஓகே சொன்னதால் அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்து கருப்பு என பெயர் வைக்கப்பட்டது. திரிஷா ஹீரோயினாக கமிட்டானார். சூர்யாவும், திரிஷாவும் பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸான கருப்பு: முதலில் மே 14ஆம் தேதி இப்படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தயார்ப்பு தரப்புக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் ரிலீஸாகாமல் ஒருநாள் தாமதமாக மே 15ஆம் தேதி ரிலீஸானது. முதலில் ரிலீஸ் இல்லை என்பது உறுதியானதும் பாலாஜி எமோஷனலாக கண்கள் கலங்கி பேசிய் வீடியோ ஒட்டுமொத்த திரைத்துறையிலும் கவனம் ஈர்த்தது. பெரும்பாலான இயக்குநர்கள் பாலாஜிக்கு ரொம்பவே ஆறுதலாக இருந்தார்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
சூப்பர் வரவேற்பு: ஒருவழியாக திட்டமிட்டபடி மே 15ஆம் தேதியானது படம் நல்லபடியாக ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்தது. படம் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ஹிட்டை சூர்யா கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன; கண்டிப்பாக இது அவருக்கு தரமான கம்பேக்தான் என அடித்து சொன்னார்கள். நாட்டார் தெய்வ வழிபாடு முறையை மைய சரடாக கொண்டு ஸ்க்ரீன் பிளேவிலும் மாஸ், கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து அட்டகாசமாக பாலாஜி ப்ரெசண்ட் செய்திருக்கிறார் என்றும் புகழ்ந்தார்கள்.
இன்னொரு படம் வருமா?: நீண்ட வருடங்களாக சூர்யா ஹிட் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். இப்போது அந்த வெற்றியை கொடுத்திருப்பதால் சூர்யாவும், ஆர்.ஜே.பாலாஜியும் இன்னொரு படத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் வர தொடங்கியிருக்கின்றன. அநேகமாக இது நடந்தாலும் பெரிய ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது திரைத்துறையில் இருக்கும் சீனியர்களின் கருத்து. இந்நிலையில் கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Sacnilk தகவல்: பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk இணையதளம் கூறியிருக்கும் தகவல்படி, இந்தியாவில் ஐந்தாவது நாளான நேற்று அந்தப் படம் மொத்தம் 12.75 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். நான்காவது நாளினை ஒப்பிடும்போது நேற்றைய வசூல் கொஞ்சம் குறைவுதான் என்றாலும் டீசன்ட்டான நம்பரையே நேற்று பெற்றிருந்ததாக அந்த வலைதளம் கூறியுள்ளது. மேலும் கருப்பு ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் அப்படம் மொத்தம் 110 கோடி ரூபாயும், உலகளவில் 161 கோடி ரூபாயும் அள்ளியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இன்றோ அல்லது நாளைக்குள்ளோ கண்டிப்பாக இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
