Karuppu Box Office Day 11: சூர்யாவுக்கு நல்ல காலம் ஆரம்பிச்சுடுச்சு.. 11 வது நாளிலும் கோடிகளை அள்ளுறாரே!
சென்னை: சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படம் அவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். அதுவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தியேட்டரிக்கல் வெற்றி என்பதே இல்லாமல் இருந்தது. அப்படி இருந்தும் அவரது அன்பான ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அப்படி இருக்கையில் கருப்பு படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு ஈட்டிக் கொடுத்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வெளியான இந்த படம் 11 நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக கமிட் ஆன முதல் படம் இதுதான். ஆனால் அதன் பின்னர் கமிட் ஆன தமிழ் படம் ஒன்றும், மலையாளப் படம் ஒன்றும் வெளியாகிவிட்டது. படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு, சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் படம் 15ஆம் தேதி வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததைக் கடந்து, பொது மக்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் கிடைத்த ஏக போக வரவேற்பு என்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி விட்டது. அதுவும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், கேரளம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு என்பது படத்தின் வசூலை தாறுமாறாக உயர்த்தி விட்டது.
11ஆவது வசூல்: இப்படி இருக்கையில் படம் வெளியாகி 11 நாளில் படத்தின் வசூல் ரூபாய் 260 கோடிகள் முதல் 275 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 11ஆவது நாளில் படம் ரூபாய் 5.90 கோடிகள் அதாவது கிட்டத்தட்ட ரூபாய் 6 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

சக்கை வசூல்: படம் ஏற்கனவே தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 130 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. படத்திற்கு வசூல் வார நாட்களிலும் சிறப்பாக இருப்பதால், படக்குழு, தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தமாகவே செம்ம ஹேப்பியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications