கருப்பசாமி கைபிடித்து.. ஆண்டவனே துணை என.. கருப்பு இசை வெளியீட்டு விழாவில் RJ பாலாஜி நெகிழ்ச்சி

சென்னை: சூர்யா - த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கருப்பு. இயக்குநர் RJ பாலாஜி எழுதி இயக்கியது மட்டுமல்லாமல், படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சாய் அபயங்கர் முதன் முதலாக கமிட் ஆன படம் இதுதான். ஆனால் இதற்குப் பின்னர் இவர் கமிட் ஆன பல்டி, டியூட் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது படத்தின் இயக்குநர் RJ பாலாஜி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில்," இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மதுரை கருப்பசாமி கோவிலுக்கு வந்தபோதே, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடக்கும் என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். இந்தப் படம் தொடங்கியதில் இருந்து இப்போது வரை கருப்பசாமி என் கையைப் பிடித்து கூடவே பயணிப்பதாக உணர்கிறேன். அவர்தான் இப்போது எனது மிகப்பெரிய பலம்.

நாங்கள் சாய் அபயங்கருடன் ஒப்பந்தம் செய்யும் போது அவர் 'சாய் அபயங்கர் 01'. இப்போது 73 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் வீட்டிற்குச் சென்றால் அங்கே ஒரு ஹெலிகாப்டரே நிற்கிறது. அவர் ஒரு காட்-கிஃப்டட் (Gifted) இசையமைப்பாளர். அவரை இந்தப் படத்திற்குள் கொண்டு வந்தது எங்களது 'Masterstroke' ஆகக் கருதுகிறோம்.

Suriya s Karuppu Event Highlights RJ Balaji s Heartfelt Speech Wins Fans

த்ரிஷா: நடிகர் இந்திரன்ஸ் இந்தப் படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பெர்பார்மன்ஸ் என்னை ஆச்சரியப்படுத்தியது. திரிஷாவால் இன்று வர முடியவில்லை, ஆனால் அவருக்குப் பெரிய நன்றிகள். 23 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது சாதாரண விஷயமல்ல. அது 'திரிஷா' என்பதால் மட்டுமே சாத்தியம். சமீப காலங்களில் அவர் நடித்ததில், இது மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும். பாடல் வெளியான 15 நிமிடங்களிலேயே மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிடுவார். அவர் ஒரு திறமையான கலைஞன்.

தடுமாற்றம்: ஒரு பெரிய நட்சத்திரத்தையும், பெரிய படத்தையும் எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தடுமாறிய போது என் கையைப் பிடித்து வழிநடத்தியவர் GK விஷ்ணு. ஒரு ஹீரோவை எவ்வளவு மாஸாகக் காட்ட வேண்டும் என்ற ரகசியம் அவருக்கு அத்துப்படி. GK விஷ்ணுவின் கேமரா மேஜிக் இந்தப் படத்தில் வேற லெவலில் இருக்கும்.

100 சதவீத உழைப்பு: வலிமை அப்டேட்டிற்குப் பிறகு அதிகமாக கேட்கப்பட்டது கருப்பு அப்டேட் தான். இதற்காக முதலில் அடி வாங்கியது தயாரிப்பாளர் SR பிரபு தான். ரசிகர்கள் அவரைத் தான் டார்கெட் செய்தார்கள். கடந்த 2 வருட பயணம் மிகக் கடினமானது. பல எதிர்பாராத மாற்றங்கள் நடந்தன. ஆனால் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து எனக்கு முழு ஆதரவு அளித்தனர். நானும் SR பிரபுவும் நிறைய சண்டையிட்டோம், விவாதித்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு குடும்பம் ஆகிவிட்டோம். இந்தப் படத்திற்காக எனது 100% உழைப்பைக் கொடுத்துள்ளேன்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X