சூர்யாவின் கருப்பு முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. இந்தப் படமாவது வெற்றியை கொடுக்குமா?
சென்னை: நடிகர் சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜ் இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே சூர்யாவின் எந்தப் படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே இந்தப் படமாவது வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்கள் வந்தன. கங்குவா படத்தை சிறுத்தை சிவா பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியிருந்தார். இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுதான் படத்தின் ப்ரோமோஷன்களில் எல்லாம் சூர்யா உள்ளிட்டோர் பேசினார்கள். ஆனால் பற்ற வைத்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி படம் இல்லை. படத்தை அனைவருமே கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனால் ரொம்பவே அப்செட் ஆனார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
ரெட்ரோவும் அப்படித்தான்: கங்குவாதான் காலை வாரிவிட்டது; கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படமாவது காப்பாற்றும் என்று நம்பினார்கள். ஆனால் அதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் சோகத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள் ரசிகர்கள். திரையரங்கில் வெளியான படங்களில் எந்தப் படம் சூர்யாவுக்கு கடைசியாக ஹிட்டானது என்று தெரியாத பரிதாப நிலைமையில் இருக்கிறார்கள் அவர்கள்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை இயக்கி இயக்குநராக ஆர்.ஜே.பாலாஜி வெற்றி பெற்றிருக்கிறார். எனவே சூர்யா நீண்ட காலமாக தேடி வரும் ஒரு வெற்றியை கருப்பு படத்தின் மூலமாவது பாலாஜி கொடுப்பாரா என்றும் ஆவல் சூர்யா ரசிகர்களிடம் ஆவல் எழுந்திருக்கிறது.
ரிலீஸ் எப்போது?: முதலில் இப்படம் ஜனவரி மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஜனநாயகன் வருவதாக இருந்ததால் ரிலீஸை படக்குழுவினர் தள்ளி வைத்துவிட்டதாக தகவல்கள் கூறின. தற்போது வந்திருக்கும் தகவல் படி இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ கண்டிப்பாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. அநேகமாக ஜனநாயகனுக்கு நிலவும் நிலைமையை பார்க்கையில் கருப்பு படமும், ஜனநாயகன் படமும் க்ளாஷை சந்திக்கும் சூழ்நிலையும் உருவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் விமர்சனம்: இந்நிலையில் கருப்பு படத்தின் முதல் விமர்சனம் வந்திருக்கிறது. அதாவது படத்துக்கு இசையமைத்திருக்கும் சாய் அபயங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "இப்போது கருப்பு படத்தின் ஃபைனல் அவுட்டை பார்த்தேன். காத்திருந்ததற்கு ஒர்த்தாக இருக்கும்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சூர்யா ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











