வழி மட்டுமல்ல.. வாழ்க்கையே கொடுத்த கருப்பு.. கருப்பன் தயவால் சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் 'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் சம்பளம் அதிரடியாக இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் திரைத்துறையினர் இடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான படம் "கருப்பு". ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் தொழில்நுட்பக் காரணங்களால் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் இருந்து ஒருநாள் தாமதமாக வெளியானது. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முதன்முறையாக வில்லனாக மிரட்டியிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஷிவதா, நட்டி, சுவாசிகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் மொத்த ஆல்பமும் ஹிட்.

தமிழ் மண்ணில் ரத்தமும் சதையுமாக கலந்துள்ளகருப்பசாமியையும், சமூகத்தில் நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களையும், ஏற்கனவே வெளியான சில படங்களை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட 'கருப்பு' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக ஒரு முறையான மெகா ஹிட் வெற்றி இல்லாமல் தவித்து வந்த சூர்யா ரசிகர்களுக்கு, இப்படத்தின் அதிரடி வெற்றி மிகப்பெரிய மன நிம்மதியையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.
சம்பளம்: இப்படி இருக்கையில், 'கருப்பு' படத்தின் அசுர வெற்றி சூர்யாவின் மார்க்கெட்டிலும், சம்பளத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, "சூர்யா தனது அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளத்தை ரூ.45 கோடியிலிருந்து அப்படியே இரட்டிப்பாக ரூ.90 கோடியாக உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், கருப்பு படத்தில் நடிப்பதற்காக அவர் வழக்கத்தை விட மிகக் குறைந்த சம்பளத்திற்கே ஒப்புக்கொண்டிருந்தார் என்பதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ்க்குக்காக அந்த பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

துணிவே துணை: அதாவது தான் கொடுத்த பணத்திற்காக தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுவதற்கான தியேட்டரிக்கல் உரிமத்தை வாங்கி உள்ளார். இதனால் அவர் விட்டுக் கொடுத்த சம்பளத்தைக் காட்டிலும் அதிக அளவில் அவருக்கு வருமானமும் லாபமும் கிடைத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இதைக் கேள்விப்பட்ட பலரும் துணிவே துணை என்று கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications