வாழ்க்கையில் முதல் முறையாக...பட்டையை கிளப்பும் சூர்யாவின் மாஸ் லுக்
சென்னை : அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் தான் நடித்த அத்தனை கேரக்டர்களையும் மறக்க முடியாத ஒன்றாக செய்யக் கூடியவர் நடிகர் சூர்யா. கடைசியாக சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம், பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
சாதாரண ஒருவனால் எப்படி சாதனையாளனாக மாற முடியும் என்பதை காட்டிய கதை. இந்த படத்தில் யதார்த்தமான நடிப்பால் அனைவரின் மனங்களையும் வென்றார் சூர்யா. இந்த படம் கிட்டதட்ட ஆஸ்கார் பரிந்துரை வரை சென்றது.

தற்போது டி.ஜெ.ஞானவேல் இயக்கும் பெயரிடப்படாத சூர்யா 39 என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுவரை நடித்த படங்களில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்ததில்லை.
வழக்கறிஞர் கெட்டப்பில் சூர்யா நடிக்கும் ஃபோட்டோக்கள் முதல் முறையாக வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தான் நடிக்கும் கேரக்டரோடு எவ்வாறு ஒன்றிப் போகிறார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். சூர்யா 39 என்ற பெயரில் ட்விட்டர் ஹேஷ்டாக் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யா 39 படத்தை சூர்யாவை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்கும் டைரக்டர் ஞானவேல், ஏற்கனவே கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் எழுத்தாளரும் நடிகருமான மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











