ஆறாயிரம் வச்சிக்கிட்டு ஏரோப்பிளேன் கம்பெனியா?.. தெறிக்கவிடும் சூரரைப் போற்று டீசர்.. சூர்யா செம!
Recommended Video
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.
2டி நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வருகிறது சூரரைப் போற்று திரைப்படம்.
இந்த வாட்டி சூர்யாவுக்கு மிஸ்ஸே ஆகாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அசத்தலான டீசர் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு வேற லெவல் எனர்ஜி கொடுத்துள்ளது.
சூரரை போற்று சூர்யா இவர் தானா? இந்தியன் ஏர்லைன்ஸ் & ஜெட் ஏர்வேஸை காலி பண்ணாராமே..!
டீசர் ரிலீஸ்
காப்பான் படத்தில் சூர்யாவுடன் நடித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் தற்போது சூரரைப் போற்று டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சாமானியன் டு சாதனை நாயகன்
ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூரரைப் போற்று என்ற பெயரில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சாதாரண கிராமத்து இளைஞன், வானத்தில் பறக்க ஆசைப்படுவதும் அதற்காக அந்த இளைஞன் எடுக்கும் முயற்சிகளே சூரரைப் போற்று படத்தின் கதைக்களம்.

பருந்தாகும் ஊர்க்குருவி
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழியை உடைக்கும் விதமாக ஊர்க்குருவி பருந்தாகுது என்ற கருவுடன் உருவாகியுள்ளது சூரரைப் போற்று.

இசை அசுரன்
அசுரன் படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் இசைக்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங். டீசரில் அவர் போட்டுள்ள பிஜிஎம் மீண்டும் ஜி.வி. பிரகாஷ் இசை அசுரன் தான் என்பதை நிரூபித்துள்ளது.
டீசர் எப்படி இருக்கு?
கையில ஆறாயிரம் ரூபாயை வச்சுக்கிட்டு ஏரோப்பிளேன் கம்பெனியை ஆரம்பிக்கப் போகும் சூர்யா எத்தனை கஷ்டங்களை சந்தித்து அதனை சாதித்தார் என்பதை செம நேர்த்தியாக டீஸர் காட்டுகிறது. இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு அடுத்த ஒரு தரமான படத்தை சுதா கொங்கரா கொடுக்கவுள்ளார் என்பது டீசரிலேயே தெரிகிறது. வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யாவின் வித்தியாசமான ஆக்டிங் டீசர் எங்கும் வியாபித்து இருக்கிறது.
ராணா டகுபதி
சூரரைப் போற்று படத்தின் தெலுங்கு டீசரை பாகுபலி வில்லன் நடிகரும் டோலிவுட் ஹீரோவுமான ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











