காதலர்களுக்கு செம ட்ரீட்.. 24 வருடத்திற்கு பிறகு வெளியாகும் மௌனம் பேசியதே.. எப்போ தெரியுமா?
சென்னை: தமிழில் வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் புது பொலிவுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி மாபெரும் வசூலை அள்ளியது. அதேபோல கமலஹாசனின் நாயகன், வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜயின் கில்லி திரைப்படம், அஜித்தின் மங்காத்தா போன்ற படங்கள் வெளியாகி மீண்டும் மகத்தான வசூல் வேட்டை நடத்தியது.
அந்த வகையில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், அஞ்சான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. அதை தொடர்ந்து, தற்போது 24 ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.

சூர்யாவின் மௌனம் பேசியதே: இன்றும் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருக்கும் த்ரிஷா, இந்தப் படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார். மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் அனைத்து ஆண்களால் ரசிக்கக்கூடி, ஒரு கெத்தான கதாபாத்திரமாக இருக்கும். பெண் மீதும், காதல் மீதும் அவரின் பார்வை வேறுவிதமாக இருக்கும். இதுதான் இந்த படத்திற்கே மிகப்பெரிய பிளஸ். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் பாடல்களாகவே உள்ளது. மேலும், சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா , செந்தில் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
காதலர் தின ஸ்பெஷல்: ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் வசூலை அள்ளுவது போல இந்த படமும் நிச்சயம் நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா, ரெட்ரோ படத்திற்கு பிறகு அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் காதலர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பிப்ரவரி மாதம் பெரிய படங்கள் எதுவும் தியேட்டரில் வெளிவராததால், நிச்சயம் இந்த படம் கணிசமான வசூலை பெரும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











