தனுஷ் டிரெண்டிங்கை தவிடு பொடியாக்கிய சூர்யா.. கொஞ்ச நேரம் கூட நீடிக்காத தி கிரேமேன் கூஸ்பம்ப்ஸ்!
சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இயக்குநர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறாரா? ஹாலிவுட்டுக்கு தனுஷ் போயிட்டாரா என சிலாகித்த ரசிகர்களுக்கு நேற்று வெளியான தி கிரேமேன் திரைப்படம் சற்றே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் சூப்பர் ஹீரோக்களை பார்த்து கூஸ்பம்ப்ஸ் அடைந்த ரசிகர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 ஸ்டைல் படம் அந்தளவுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
தி கிரேமேன் படத்தின் ஓடிடி ரிலீசுக்காக இந்தியாவுக்கு வந்து வணக்கம் எல்லாம் வைத்தாலும், அது வெளியான சில மணி நேரங்களிலேயே அதன் டிரெண்டிங்கை அசால்ட்டாக காலி செய்து விட்டார் நடிகர் சூர்யா.

தனுஷின் ஹாலிவுட் படம்
பாலிவுட், பிரெஞ்சு படம் என நடித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது தி கிரேமேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். மார்வெல் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி வந்த ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் கிறிஸ் எவான்ஸ் மற்றும் ரியான் கோஸ்லிங் நடிப்பில் வெளியான தி கிரேமேன் படத்தில் அவிக் சான் எனும் கதாபாத்திரத்தில் தமிழனாகவே நடித்திருக்கிறார் தனுஷ்.

இதுவும் ஓடிடி
தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியானது. அட்ரங்கி ரே மற்றும் மாறன் திரைப்படங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகின. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலேயே நேரடியாக நேற்று வெளியானது தி கிரே மேன். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்கின்றனர்.

தனுஷ் மாஸ்
ஆனால், குறைந்த அளவே வந்தாலும், ரியான் கோஸ்லிங் கையில் கத்தி குத்துவது, நாயகி அனா டி அர்மாஸை பொளந்து கட்டுவதுமாக ஆக்ஷனில் அர்ஜுனுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். தனுஷின் நடிப்பை வெகுவாக இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களும் பாராட்டி உள்ளனர் ரசிகர்களும் பாராட்டி உள்ளனர். தனியாக தனுஷுக்கே ஒரு படத்தையும் உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
Recommended Video

டிரெண்டிங்கை காலி செய்த சூர்யா
ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த தி கிரே மேன் வெளியானதும் ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் டிரெண்டிங்கை தெறிக்க விட்டனர். ஆனால், அது கொஞ்ச நேரத்திலேயே அடங்கிப் போனது தான் ஆச்சர்யம். அதற்கு காரணம் நடிகர் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது தான். சூரரைப் போற்று படத்துக்கு 5 தேசிய விருதுகள் அடுத்தடுத்து அறிவிக்க ஒட்டுமொத்த டிரெண்டிங்கையும் வசப்படுத்தினார் சூர்யா. பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால், சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து இரு நாட்களாக சோஷியல் மீடியாவை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்


Click it and Unblock the Notifications











