சூர்யா - கே.வி.ஆனந்த் படத்துக்கு இசையமைப்பாளர் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Recommended Video

சென்னை : சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு NGK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வந்துள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்த் தங்களது படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா 37
'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வரும் சூர்யா இதை முடித்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை
சூர்யாவின் 37-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக
சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைவது இது மூன்றாவது முறை ஆகும்.

கூட்டணி
இதற்கு முன் கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார். அவற்றைப் போலவே, இந்தப் படத்திலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











