தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய சூர்யாவின் என்.ஜி.கே.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே.படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே.படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. ஒரு அரசியல் சார்ந்த படம். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

இந்தப் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்டது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழகத்தை அடுத்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
என்.ஜி.கே படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் என்.ஜி.கே. தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தீபாவளி அன்று என்.ஜி.கே படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற செய்தியை கேட்ட சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











