நான் கழுகுடா... இது அஞ்சானில் ‘சிங்கம்’ பேசும் பஞ்ச்!

சென்னை: சூர்யாவின் புதிய படமான அஞ்சானில் அவர் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர்கள் தங்கள் படங்களில் அடிக்கடி பேசும் வசனம் பஞ்ச் டயலாக் எனப்படுகிறது. அத்தகைய டயலாக்குகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் தங்களது அன்றாட வாழ்க்கையிலும் அடிக்கடி பிரயோகிக்கின்றனர் ரசிகர்கள்.

இதனால், புதிய படங்களின் பஞ்ச் டயலாக்குகளை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். பஞ்சு மிட்டாய் சாப்பிடுபவர் முதல் பங்க்சர் பார்க்கும் கடை வரை பஞ்ச் டயலாக் பேசாதவரைப் பார்ப்பதே அரிதாகி விட்ட காலம் இது.

அந்த வகையில் அஞ்சான் படத்தில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக் என யுடிவி தனஞ்செயன் டயலாக் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மொழிப்பெயர்ப்பு...

மொழிப்பெயர்ப்பு...

ஆங்கிலத்தில் தனஞ்செயன் வெளியிட்டுள்ள செய்தியை தமிழில் மொழிப் பெயர்த்தால் பின் வருமாறு வருகிறது சூர்யாவின் புதிய பஞ்ச்.

அஞ்சான்டா...

அஞ்சான்டா...

அதாவது, 'பட்டாசு சத்தத்துக்கு பறந்துபோற புறான்னு என்னை நீ நினைக்கிற. ஆனா நான் இரைக்காக காத்திருந்து பிடிக்கிற கழுகுடா... அஞ்சான்.'

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

வெளியாகியுள்ள இப்புதிய பஞ்ச் டயலாக்கால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. மேலும், இப்படத்தில் நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

ஒன்றரை டன் பஞ்ச்...

ஒன்றரை டன் பஞ்ச்...

ஏற்கனவே, தனது முந்தைய படமான சிங்கத்தில் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா' என பஞ்ச் பேசியிருந்தார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X