Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ஆஸ்கர் அகாடமி அழைப்பிற்கு சூர்யாவின் பதில்...தீயாய் பரவும் ட்வீட்
சென்னை : ஆஸ்கர் அகாடமியின் Motion picture of Arts and sciences குழுவில் உறுப்பினராக சேர வருவதற்காக ஆஸ்கர் அகாடமி அழைப்பு அனுப்பிய உலகின் 357 சினிமா பிரபலங்களின் பட்டியலில் சூர்யா பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக இணைய உள்ள முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். இதற்காக சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா,
காஜோலுக்கு
ஆஸ்கர்
அகாடமி
அழைப்பு...
கொண்டாட்டத்தில்
ரசிகர்கள்

கமல் அனுப்பிய வாழ்த்து
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சகோதரர் சூர்யா நட்சத்திரங்களின் நிலத்தில் தடம் பதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உயரிய நட்சத்திர கூட்டத்தில் நீங்கள் இணைவது பெருமை அளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இதற்கு சூர்யாவும் பதிலுக்கு நன்றி அண்ணா என பதில் போஸ்ட் போட்டுள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்
சூர்யாவின் கோலிவுட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை என ரசிகர்கள் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. வாடிவாசல் படம் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் நீங்களும் கலந்து கொள்ள உள்ளது பெருமையாக உள்ளது என உணர்ச்சி பொங்க வாழ்த்தி வருகின்றனர்.

சூர்யா போட்ட ட்வீட்
இந்நிலையில் ஆஸ்கர் அகாடமிக்கு நன்றி தெரிவித்து சூர்யா ட்வீட் போட்டுள்ளார். அதோடு, உங்களின் கனிவான அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன் என சூர்யா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எப்போதும் உங்களை பெருமைப்பட வைப்பேன் என்றார்.

அதிகம் பகிரும் ரசிகர்கள்
சூர்யாவின் இந்த ட்வீட் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அதிகமானவர்கள் இவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவை தலைவா, அண்ணா என கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்
சூர்யா தற்போது பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து மாதவன் இயக்கி, நடித்துள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதில் நம்பி நாராயணனை, நடிகர் சூர்யா பேட்டி எடுப்பது போன்ற ரோலில் சூர்யாவாகவே நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அக்ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோல் பண்ண போகிறார்.